Homeதமிழ்நாடுஆடிப்பெருக்கு கொண்டாட்டம்..

ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்..

கொள்ளிடம் ஆற்றில் திரண்ட மக்கள்!

சிதம்பரம்,ஆடிப்பெருக்கை முன்னிட்டு புனித நீராடி வழிபடுவதற்காக சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் ஏராளமான மக்கள் திரண்டனர்.

நீர்நிலைகளை தெய்வமாக வழிபடும் ஆடிப்பெருக்கு விழா இன்று கொண்டாடப்படுகிறது.தமிழகத்தில் ஆற்றங்கரை ஓரங்களில் பூஜை செய்து வழிபடுகின்றனர். முக்கியமாக தமிழகத்தில் காவிரி ஓடும் ஊர்களில் ஆடிப்பெருக்கு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வல்லம்படுகை பகுதியில் புகழ்பெற்ற கொள்ளிடம் ஆறு உள்ளது. ஆடிப்பெருக்கை முன்னிட்டு இந்தக் கொள்ளிடம் ஆற்றில் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், சீர்காழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான திரண்டனர்.

கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் பெண்கள் தலைவாழை இலையிட்டு தேங்காய் பழங்கள், தாம்பூலம், மஞ்சள்,குங்குமம், காதோலை கருகமணி, அரிசி, வெல்லம், காப்பரிசி ஆகியவற்றை வைத்து காவிரி தாய்க்கு படைத்து வணங்கி வழிபட்டார்கள்.புதுமண பெண்கள் தாலிக்கயிற்றை மாற்றி தம் வாழ்க்கை சுபமாக அமைய வேண்டிக்கொண்டனர்.

ஓடும் நீரில் புதுமணத் தம்பதியர் தங்களது திருமண மாலையை விட்டால் தங்கள் குடும்பம் செல்வ செழிப்போடு வளரும் என்பது ஐதீகம் என்பதால் புதுமணத் தம்பதிகள் தங்களது திருமண மாலையை ஆற்றில் விட்டு, வேண்டிக்கொண்டனர்.

ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோயிலில் இருந்து நடராஜரின் பிரதிநிதியான சந்திரசேகர சுவாமி புறப்பட்டு சிதம்பரம் அருகே வல்லம்படுகையில் உள்ள கொள்ளிடக்கரையில் எழுந்தருளினார். பின்னர் அஸ்திரராஜருக்கு அபிஷேக ஆராதனைகளும், அதனைத் தொடர்ந்து தீர்த்தவாரியும் நடைபெற்றது. தீர்த்தவாரியை திரளான மக்கள் தரிசித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img