Homeதமிழ்நாடுமாவட்ட செய்திகள்தமிழக வெற்றி கழகம் 108 ஆம்புலன்ஸ் போன்றது" -திருச்சியில் லட்சிய ஜனநாயக கட்சி மாநில பொதுச்செயலாளர்...

தமிழக வெற்றி கழகம் 108 ஆம்புலன்ஸ் போன்றது” -திருச்சியில் லட்சிய ஜனநாயக கட்சி மாநில பொதுச்செயலாளர் அதிரடி! திருச்சி மாநகராட்சி தேர்தலில் மகளிருக்கு 50% இடஒதுக்கீடு:…..

திருச்சியில் லட்சிய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் நியமன விழா: மாநிலப் பொதுச்செயலாளர் நெல்லை ஜீவா பரபரப்பு பேச்சு!லட்சிய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவரும், புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினருமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கட்சி நிர்வாகிகளைத் தமிழகம் முழுவதும் குறுகிய காலத்தில் நியமிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இதன் ஒரு பகுதியாக, திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் தலைமையில் புதிய நிர்வாகிகளுக்கு நியமன ஆணைகள் வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் லட்சிய ஜனநாயக கட்சியின் தமிழ்நாடு மாநிலப் பொதுச்செயலாளர் நெல்லை ஜீவா கலந்துகொண்டு பேசுகையில்:”லட்சிய ஜனநாயக கட்சியில் 74 மாவட்டச் செயலாளர்களாகப் பெண்கள் பொறுப்பேற்றுள்ளனர் என்பது நமக்கு மாபெரும் பெருமையாகும். சிங்கப்பூரைப் போல் தமிழ்நாட்டை லட்சிய ஜனநாயக கட்சி வளர்ச்சியடையச் செய்ய முயன்றால், அதை திமுக, அதிமுக, தமிழக வெற்றி கழகம் போன்ற கட்சிகள் விட்டுவிடுமா? நல்ல கட்சியை நீங்கள் தேர்ந்தெடுத்தது போல, நல்ல உறுப்பினர்களையும் தேர்ந்தெடுங்கள். தமிழக வெற்றி கழகம் என்பது 108 ஆம்புலன்ஸ் போலத்தான் செயல்படுகிறது,” என்று பேசினார். இவரது இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தொடர்ந்து பேசிய மாநகர் மாவட்டச் செயலாளர் தில்லை எம்.ஆர். சதாம், திருச்சி மாநகராட்சி தேர்தலில் மகளிருக்கு 50 சதவீதம் இடஒதுக்கீட்டை லட்சிய ஜனநாயக கட்சி வழங்கும் என்று அதிரடியாகத் தெரிவித்தார்.முன்னதாக, சிறப்புரையாற்றிய நிர்வாகிகள், “மத்திய பகுதி மற்றும் மாநகரப் பகுதிகளை உள்ளடக்கிய இந்த விழாவின் கதாநாயகன், எனது பாசமிகு சகோதரர் மாவட்டச் செயலாளர தில்லை சதாம் அவர்களே… லால்குடி, திருவெறும்பூர், திருச்சி கிழக்கு ஆகிய பகுதிகளின் மாவட்டச் செயலாளர் அருமை கே.எஸ். கண்ணன் அவர்களே… ஸ்ரீரங்கம் மற்றும் மண்ணச்சநல்லூர் தொகுதிகளின் மாவட்டச் செயலாளர் சசிகுமார் அவர்களே…” என நிர்வாகிகளை அறிமுகப்படுத்திப் பாராட்டினர்.மேலும், புதுச்சேரியில் மட்டுமல்லாது தமிழகத்திலும் அரசியல் எதிர்காலம் இந்த இளைஞர்களின் கையில்தான் உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் மிகப்பெரிய இலக்கோடு கட்சி செயல்பட்டு வருகிறது என்றும் நிர்வாகிகள் வலியுறுத்தினர்.இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் தில்லை எம்.ஆர். சதாம், தெற்கு மாவட்டச் செயலாளர் கே.எஸ். கண்ணன், வடக்கு மாவட்டச் செயலாளர் சசிகுமார் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, பகுதி, வட்டச் சார்பு அணிகளின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read