லண்டனில் முதலமைச்சர் விஜய் தங்கியுள்ள நட்சத்திர விடுதி முன்பு அவரைக் காண ஏராளமான மக்கள் திரண்டனர்.
முதலமைச்சர் விஜயைக் காண, அவர் தங்கியுள்ள ஹோட்டல் முன்பு த.வெ.க. கொடியுடன் இளைஞர்கள் திரண்டு உற்சாக முழக்கமிட்டனர். இதையடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அனைவரும் கலைந்து செல்லுமாறு லண்டன் மாநகர போலீஸார் ஒலிப்பெருக்கி வாயிலாக வேண்டுகோள் விடுத்தனர்.
மேலும், முதலமைச்சர் விஜயின் பாதுகாப்பு அதிகாரி தர்மராஜனும் ஒலிப்பெருக்கி மூலம் அனைவரும் கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.:ஹோட்டல் முன்பு காத்திருக்க வேண்டாம்.. த.வெ.க. IT அணி வேண்டுகோள்
இதனிடையே, லண்டனில் முதலமைச்சர் விஜயைக் காண ஹோட்டல் வாசலில் யாரும் காத்திருக்க வேண்டாம் என்று த.வெ.க. தகவல் தொழில்நுட்ப அணி வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும், முதலமைச்சர் விஜய் பயணிக்கும் சாலையில் காத்திருப்பது போன்ற முயற்சிகளிலும் ஈடுபட வேண்டாம் என்றும், பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
