Homeதமிழ்நாடுமாவட்ட செய்திகள்எலக்ட்ரானிக் கடை உரிமையாளரை மிரட்டியதாக கும்பகோணம் மாநகராட்சி மேயர் மீது காவல் நிலையத்தில் புகார்! நடந்தது...

எலக்ட்ரானிக் கடை உரிமையாளரை மிரட்டியதாக கும்பகோணம் மாநகராட்சி மேயர் மீது காவல் நிலையத்தில் புகார்! நடந்தது என்ன?

கும்பகோணம் சாரங்கபாணி சன்னதி தெருவில் உள்ள எலக்ட்ரானிக் கடைக்குள் மாநகராட்சி மேயர் சரவணன் தனது ஆதரவாளர்களுடன் நேற்று சென்று, கடை உரிமையாளரை மிரட்டியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாம் கள ஆய்வு செய்தபோது முக்கிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளதுகும்பகோணம் சாரங்கபாணி சன்னதி தெருவில் ஈஸ்வரி ஸ்டோர் என்ற பெயரில் எலக்ட்ரானிக் கடை நடத்தி வருபவர் பாஸ்கரன்,51 இவரது சகோதரர் வெங்கடேசன் என்பவர், கும்பகோணம் டி.எஸ்.ஆர். பெரிய கடைத் தெருவில் காளீஸ்வரி ஸ்டோர் என்ற பர்னிச்சர் மற்றும் எலக்ட்ரானிக் கடை நடத்தி வந்துள்ளார் இந்நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமானதாக கூறப்படும் துக்காம்பாளைய தெருவில் உள்ள சுமார் 3000 சதுர அடி வீட்டுமனையை அவசரமாக விற்பனை செய்ய முயற்சித்துள்ளார். (காரணம்) துக்காம்பாளைய தெருவில் உள்ள 3000 சதுர அடி இடத்தின் மீது தனியார் வங்கியில் போலியான ஆவணங்கள் மூலம் 82 லட்சம் முன்கூட்டியே கடன் வாங்கி இருந்ததாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. (குறிப்பு) “போலியான ஆவணம் என்பது காலப்போக்கில் தான் அனைவருக்கும் தெரிய வந்துள்ளது” அடமானத்தில் வைத்த பத்திரங்களை மீட்டு அந்த இடத்தை விற்பனை செய்வதாக கூறி கும்பகோணம் துக்காம்பாளைய தெருவில் வசித்து வரும் மாநகராட்சி மேயர் சரவணன் தலைமையில் அப்பகுதியில் உள்ள சில பெண்களிடம் இடத்தை பேரம் பேசப்பட்டுள்ளது இதன் காரணமாக அந்த வீட்டுமனையை காட்டி வெங்கடேசன் 73 லட்சம் கடன் பெற்றதாக தெரிய வருகிறது.இந்த நிலையில், பல மாதங்கள் கடந்தும் பணம் திருப்பித் தரப்படாததுடன், இடமும் விற்பனை செய்யப்படாததை அறிந்த பெண்கள் மேயர் சரவணனை சந்தித்து பணத்தை திருப்பி கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளனர். இதனால் மேயர் சரவணன் வெங்கடேசனை அப்போது தேடி வந்துள்ளார். போன் செய்தால் அழைப்பு துண்டிக்கப்பட்டதாக தெரிய வருகிறது. அவர் தலைமறைவு என்பதை அறிந்த சரவணன், அந்தப் பெண்களிடம் பணத்தை எப்படியாவது திருப்பிக் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்துள்ளார், பின்னர் சந்தேகத்தில் துக்காம்பாளைய தெருவில் உள்ள இடம் தொடர்பாக Town Survey Land Register ஆவணங்களை இணையத்தில் ஆய்வு செய்துள்ளார். மேயர் சரவணன், அப்போது அந்த இடம் ஆதி கும்பேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமானது என அதிர்ச்சிகரமான தகவல் ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது இதனால் மனமுடைந்த மேயர் சரவணன் செய்வதறியாது திகைத்துள்ளார், பின்னர் கொடுத்த பணத்தை எப்படியாவது திருப்பி வாங்கி விட வேண்டும் என்ற நோக்கத்துடன் மேயர் சரவணன் தொடர்ந்து வெங்கடேசனை தேடியும் வந்துள்ளார்இதற்கிடையே, நடந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, “டி எஸ் ஆர் பெரிய கடை தெருவில் வெங்கடேசன் நடத்தி வந்த காளீஸ்வரி ஸ்டோர் தனியார் வங்கியில் சுமார் ஒரு கோடிக்கு அதிகமாக வாங்கிய கடன் தொடர்பான நடவடிக்கையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் வெங்கடேசன் சில வருடங்களுக்கு முன் வாங்கிய கடனை கட்டத் தவறிய நிலையில் கோர்ட்டு உத்தரவு படி சில மாதங்களுக்கு முன்பு கிழக்கு காவல்துறையினர் முன்னிலையில் வங்கி அதிகாரிகள் இடத்தை ஜப்தி செய்துள்ளனர். இதனால் வெங்கடேசன் அவமானம் தாங்க முடியாமல் மனமுடைந்து வெளியூருக்குச் சென்று தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது”இதற்கிடையில் மேயர் சரவணன் காளீஸ்வரி ஸ்டோர் உரிமையாளர் வெங்கடேசனை தீவிரமாக தேடி வந்ததை அறிந்த அவரது சகோதரர் ஈஸ்வரி ஸ்டோர் பாஸ்கரன் அண்ணனை தொந்தரவு செய்ய வேண்டாம், அந்த கடனை நானே கொடுத்து விடுகிறேன் என வாக்குறுதி அளித்ததாக தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், வெங்கடேசன் வாங்கிய பணத்தை கொடுப்பதாக வாக்குறுதி அளித்துவிட்டு பாஸ்கரனும் பணத்தை கொடுக்காமல் அண்ணன் ஏமாற்றியது போல் தம்பியும் பல மாதங்களாக இழுத்தடிப்பு செய்து வந்துள்ளார் மனமுடைந்த மேயர் சரவணன் பொறுமையை இழந்து பணத்தை கேட்பதற்காகசம்பவத்தன்று 22-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மதியம், இடத்தின் பெயரில் பணம் கொடுத்தவர்கள் சில பெண்களை அழைத்துக் கொண்டு சாரங்கபாணி சன்னதி தெருவில் உள்ள ஈஸ்வரி ஸ்டோர் கடைக்குச் சென்றுள்ளார், அப்போது வாடிக்கையாளர்கள் முன்னிலையில் பாஸ்கரனிடம் பணத்தைத் திருப்பிக் கொடுக்குமாறு கேட்டதாகவும், பணம் கொடுத்த பெண்களும் அந்த இடத்தில் நின்று பணம் கேட்டு சத்தம் போட்டதால் அவமானம் தாங்க முடியாத கடை உரிமையாளர் பாஸ்கரன் மேயர் சரவணன் மீது காவல் நிலையத்தில் பொய்யான புகார் அளித்துள்ளதாக கூறுகின்றனர். இதுகுறித்து கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய போலீசார் இருவரிடமும் நடத்தி வரும் விசாரணை காரணமாக கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார மக்களிடையே இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.எழுத்து அ.மகேஷ் தொடர்பு எண் 8940066945

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read