Homeதமிழ்நாடுமாவட்ட செய்திகள்செவிலியரை கடத்தி கொலை பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் த வெக அரசுக்கு காயல்...

செவிலியரை கடத்தி கொலை பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் த வெக அரசுக்கு காயல் அப்பாஸ் வலியுறுத்தல்!

பெண் செவிலியர் கடத்தி கொலை பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என த வெ க அரசை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.ராமநாத புரம் மாவட்டம்,முதுகுளத்தூர் பூங்குளம் பகுதியை சேர்ந்த உத்திரா என்கிற பெண் திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் செவிலியராக பணியாற்றி தன் கணவரோடு வாடகை விட்டில் வசித்து வந்த நிலையில் திடீரென பெருந்துறை அருகே விஜயமங்களம் சுங்கச்சாவடி அருகில் நிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது இக்கொடூர சம்பவத்தை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மிகவும் வன்மையாக கண்டிக்கிறது. மேலும்.செவிலியர் உத்திரா மரணம் தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்து உள்ளனர் என்கிற செய்தியும் வெளியாகி உள்ளது. மேலும் கொடூர இக்கொலையை ஒருவர் மட்டும் செய்திருக்க வாய்பு இல்லை ஆகவே காவல் துறையினர் கைது செய்த நபரிடம் பல்வேறு கோனத்தில் விசாரனை செய்து இக்கொலைக்கான உண்மையான காரணத்தை கண்டறிந்து இக்குற்றத்தில் சம்பந்த பட்ட நபர்களையும் உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.மேலும்.செவிலியர் உத்திராவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்களையும் அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கிறோம். மேலும் பரிதாபமாக உயிரிழந்த உத்திராவின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ 50 லட்சம் இழப்பிடு தொகை வழங்குவதுடன் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் சார்பாக கேட்டு கொள்கிறோம்.எனவே : தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல், கொடூர கொலைகள் போன்ற குற்ற செயலில் ஈடு படும் நபர்களை சட்ட ரிதீயாக கடுமையான தண்டனைக்குள்ளாக்க பட வேண்டும். ஏனென்றால் இது போன்று பெண்களுக்கும் எதிரான கொடூர குற்றங்களை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். ஆகவே: பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் த வெ க அரசு எடுக்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம். இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read