தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருபுவனம் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் 200 பேருக்கு இனிப்புகள், வேட்டி, சேலை, குடை, தட்டு உள்ளிட்ட பரிசு பொருட்களும், குழந்தைகளுக்குப் பட்டாசுகள் அடங்கிய தீபாவளி பரிசுத் தொகுப்பும் வழங்கப்பட்டன. தமிழக வெற்றிக்கழக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான ச. ஜோசப் விஜய்யின் நல்வாழ்த்துகளுடனும், கழகப் பொதுச்செயலரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சருமான புஸ்ஸி என். ஆனந்த் வழிகாட்டுதலின்படியும், கழக நிர்வாகி மணிமாறன் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை அன்று இந்நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு திருபுவனம் பேரூர் கழகச் செயலாளர் மாதுசூதனன் முன்னிலை வகித்தார், வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் ர. வினோத் பங்கேற்று, தூய்மைப் பணியாளர்கள், மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு பெட்டகம், வேட்டி, சேலை, குடை, தட்டு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். மேலும், பள்ளி மாணவர்களுக்கு பட்டாசுகள் அடங்கிய தீபாவளி பரிசுத் தொகுப்புகளையும் அளித்தார்.தொடர்ந்து, அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்த அமைச்சர் வினோத், பண்டிகைக் காலத்தில் ஜாதி, மதம், பேதமின்றி அனைவரும் ஒற்றுமையாகவும், மகிழ்ச்சியுடனும், இந்த தீபாவளியை கொண்டாட வேண்டும் என வாழ்த்துரை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், மாவட்டக் கழகப் பொருளாளர் ஆர். விஜய் சந்திரன், மாநகரக் கழகச் செயலர் முருகானந்தம், மாவட்ட மகளிர் அமைப்பாளர் அஞ்சனா பாலாஜி, மாவட்டச் சட்ட ஆலோசகர் அணி ஒருங்கிணைப்பாளர் அசன் முகமது, மற்றும் மாவட்ட, மாநகர, ஒன்றிய, பகுதி, பேரூர், வார்டு, கிளை, சார்பு அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.செய்தியாளர் அ.மகேஷ்
