Homeதமிழ்நாடுமாவட்ட செய்திகள்திருவிடைமருதூர் அருகே திருபுவனத்தில் கூட்டுறவு அங்காடியில் ரூ.200-க்கு சிறப்பு மளிகைத் தொகுப்பு விற்பனை திட்டம்: அமைச்சர்...

திருவிடைமருதூர் அருகே திருபுவனத்தில் கூட்டுறவு அங்காடியில் ரூ.200-க்கு சிறப்பு மளிகைத் தொகுப்பு விற்பனை திட்டம்: அமைச்சர் ர. வினோத் தொடங்கி வைத்தார்

அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் தமிழக அரசின் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் தமிழகத்தில் ஊரகப் பகுதிகளிலுள்ள கூட்டுறவு அங்காடிகள் மூலம் ரூ.200-க்கு சிறப்பு மளிகைத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை அமைச்சர் ர. வினோத் தொடங்கி வைத்தார்.தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் ஒன்றியத்துக்குட்பட்ட திருபுவனம் பேரூராட்சியிலுள்ள திருவனை கூட்டுறவு சங்க பண்டக சாலை அங்காடியில், பொதுமக்கள் நலனுக்காக ரூ. 200க்கு சிறப்பு மளிகை தொகுப்பு திட்டம் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு மளிகைத் தொகுப்புகளை வழங்கினார்.பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களிலிருந்து தமிழக மக்களின் தேவைக்காக தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அதிக அளவில் சன்ன ரக அரிசி கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தில், குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்களில் சன்ன ரக நெல் சாகுபடியை வரும் காலங்களில் அதிகரிக்கும் வகையில் அரசு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தியுள்ளது.கும்பகோணம் வட்டத்தில் தற்போது சுமார் 2,500 ஹெக்டேர் பரப்பளவில் சன்ன ரக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இந்த ரக நெல் சாகுபடியை அதிக அளவில் அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.மேலும், குத்தகை அடிப்படையில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்குப் பயிர் காப்பீடு கிடைப்பதில் உள்ள சிரமங்கள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, கவனத்தில் மேற்கொண்டு விரைவில் சரிசெய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.நிகழ்ச்சியில், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் இரா.ரேவதி,இ.ஆ.ப.வருவாய் கோட்டாட்சியர் வி.எம்.திருமலை உள்ளிட்ட அரசு அலுவலர்கள், கூட்டுறவுத் துறை அதிகாரிகள், தவெக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.செய்தியாளர்: அ. மகேஷ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read