மாணவர்கள் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை
கும்பகோணத்தில் சிறுவர் பூங்காவை சீரமைக்க அமைச்சர் வினோத் நேரில் ஆய்வுமாணவர்கள் கோரிக்கையை ஏற்று நடவடிக்கைகும்பகோணம், நவ. 1 – கும்பகோணம் மாநகராட்சிக்கு உள்பட்ட 7-ஆவது வார்டு, திருவள்ளுவர் நகர் 2-ஆவது கிராஸ் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா, போதிய பராமரிப்பின்றி மரங்கள், செடிகள் முளைத்து பாழடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் சிறுவர்களும் பொதுமக்களும் பூங்காவுக்குள் செல்ல முடியாத அவல நிலை நிலவுகிறது. மழைக்காலங்களில் பூங்காவுக்குள் விஷ ஜந்துக்கள் நடமாடுவதால், மாணவர்கள், சிறுவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சீரமைக்க வேண்டும் எனப் பள்ளி மாணவர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத் ஞாயிற்றுக்கிழமை அந்தப் பூங்காவை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வுக்குப் பின், சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளை அழைத்த அமைச்சர், பூங்காவை உடனடியாகச் சுத்தம் செய்து சீரமைக்க வேண்டும் என அறிவுறுத்தினார். பொதுமக்கள், சிறுவர்கள், பள்ளி மாணவர்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் நடைமேடை அமைக்கவும் அவர் வலியுறுத்தினார். இத்திட்டத்துக்கான செலவுத் தொகை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.மேலும், பூங்காவைத் தொடர்ந்து முறையாகப் பராமரிக்கவும், அப்பகுதி பொதுமக்களும் சிறுவர்களும் பயன்பெறும் வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைவாக மேற்கொள்ளவும் அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.ஆய்வின்போது, மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் தினேஷ்குமார், வார்டு கண்காணிப்பாளர் ஜெபாஸ்டின், குடிநீர் ஆய்வாளர் சங்கர், தவெக தஞ்சை கிழக்கு மாவட்டப் பொருளாளர் விஜய் சந்திரன், மாநகரச் செயலாளர் முருகானந்தம், வார்டு செயலாளர் விஜயா, பகுதிச் செயலாளர் சதீஷ், வினித்குமார், சுதாகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.செய்தியாளர்: அ. மகேஷ்
