Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    பக்ரீத்தை முன்னிட்டு இஸ் லாமியர்களுக்கு துரோகம் ஜி ஜி சிவா கண்டனம்

    May 30, 2026

    பெட்ரோல், டீசல் விலை, வணிகப் பொருட்கள் விலை தொடர் உயர்வுக்கு எதிராக கும்பகோணத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம்

    May 30, 2026

    கட்சி தலைமைக்கு கட்டுப்படாத நிர்வாகிகளை களையெடுப்பாரா முதல்வர் ஜோசப் விஜய்..?”

    May 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » பல்வேறு விளையாட்டு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா
    மாவட்ட செய்திகள்

    பல்வேறு விளையாட்டு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா

    SahabudeenBy SahabudeenFebruary 8, 2025No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் குணசீலராஜ் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் சார்லஸ் திரவியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தூத்துக்குடி நாசரேத் திருமண்டல, உயர்நிலை, மேல்நிலை மற்றும் சிறப்பு பள்ளிகளின் மேலாளரும், நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியின் தாளாளருமான ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி முருகையா கலந்து கொண்டு, மாணவர்களுக்கு வெற்றிக் கோப்பை, சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி சிறப்பித்தார். தமிழ் நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தூத்துக்குடி மாவட்டத்தில் முதலிடம் பெற்று, மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் பங்கு பெற்ற ஒன்பதாம் வகுப்பு மாணவர் முத்துக்குமார், மற்றும் திருச்செந்தூர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான நீளம் தாண்டுதல் போட்டியில் மூன்றாம் இடம் பெற்ற 11ம் வகுப்பு மாணவர் ஜோயல் ராஜ், 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மூன்றாம் இடம் பெற்ற 11ம் வகுப்பு மாணவர் வெங்கடேஷ் ஆகியோருக்கும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, கபடி போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற கபடி வீரர்களுக்கு பரிசு கோப்பை, பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பாராட்டு விழா நிகழ்ச்சியில், உடற்கல்வி இயக்குனர் பெலின் பாஸ்கர், உடற்கல்வி ஆசிரியர் தனபால், கபடி பயிற்சியாளர் தீபன், இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ், ஓவியக்கலை ஆசிரியர் அலெக்சன் கிறிஸ்டோபர் ஆகியோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்களை, பிற ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பாராட்டினர்.

    Post Views: 447
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    பெட்ரோல், டீசல் விலை, வணிகப் பொருட்கள் விலை தொடர் உயர்வுக்கு எதிராக கும்பகோணத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம்

    May 30, 2026

    கட்சி தலைமைக்கு கட்டுப்படாத நிர்வாகிகளை களையெடுப்பாரா முதல்வர் ஜோசப் விஜய்..?”

    May 27, 2026

    கும்பகோணத்தில் அம்பேத்கர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம்

    May 27, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,069)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (195)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (300)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.