Homeதமிழ்நாடுமாவட்ட செய்திகள்நாசரேத் நூலகத்தில் மாதாந்திர இலக்கிய கூட்டம்

நாசரேத் நூலகத்தில் மாதாந்திர இலக்கிய கூட்டம்

நாசரேத் நூலகத்தில் மாதாந்திரக் நடந்தது
நாசரேத் நூலக வள்ளுவர் வாசகர் வட்டத்தின் சார்பாக நாசரேத் நூலக அரங்கில் வைத்து இலக்கிய கூட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வாசகர் வட்டத்தலைவர் அய்யாக்குட்டி தலைமை வகித்தார்.நூலகர் பொன் ராதா, பேராசிரியர் காசிராசன், துணைத் தலைவர் கொம்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். எழுத்தாளர் கண்ணகுமார விஸ்வரூபன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
இலக்கியத் தேன் என்ற தலைப்பில் சொற்பொழிவு நடைபெற்றது.
இதில் இலக்கிய தமிழ்ச்செம்மல் காளியப்பன் பேசினார். . தேரி இலக்கியவாதி எழுத்தாளர் கண்ணகுமார விஸ்வரூபன் கருத்துரை வழங்கினார். மகளிர் தின சிறப்பு கவிதைகள் கவிஞர் சிவா வழங்கினார். அதனைத் தொடர்ந்து கவிதாயினி நேஷிகா. மூக்குப்பீறி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சோனியா ஆகியோருக்கு சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வில்மருத்துவர் விஜய் ஆனந்த், இலக்கியவாதிமணிமோழிசெல்வன்.
முன்னாள் பஞ் தலைவர் ரவி செல்வக்குமார். ஓய்வு பெற்ற பேராசிரியர் காசிராஜன். ஓய்வு பெற்ற ஆசிரியர் செல்வின், , தொழிற்சங்க தலைவர் கிருஷ்ணராஜ்,கவிஞர் சிவா, செல்லப்பாண்டியன், ஞானையா, கிறிஸ்டோபர், , சுரேஷ், சங்கர், ஜான் பிரிட்டோ, வேல்முருகன் . ரத்தன சிங்.கிங்ஸ்லி.உள்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இறுதியில் வாசகர் வட்ட முன்னாள் தலைவர் கண்ணன் நன்றி கூறினார்.

Must Read