நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் இந்த கல்வியாண்டிற்கான தமிழக அரசின் விலையில்லா பாடப் புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. புதிதாக 6ம் வகுப்பு, 9ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கும், ஏற்கனவே பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வகுப்பு வாரியாக பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன. தலைமையாசிரியர் குணசீலராஜ் மாணவர்களுக்கு பாட புத்தகங்களை வழங்கினார். இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ், பாட புத்தகங்களின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். பாட புத்தகங்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும், அன்றன்று நடத்தக்கூடிய பாடங்களை நாள்தோறும் கற்க வேண்டும், இந்த கல்வியாண்டில் மாணவர்கள் நன்கு கல்வி கற்று அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என மாணவர்களை கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் பிற ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். ஓவியக்கலை ஆசிரியர் அலெக்ஸன் கிறிஸ்டோபர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் தனபால் மற்றும் சுஜித் செல்வ சுந்தர் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் புதிய கல்வி ஆண்டிற்கான புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி
Related Posts
Add A Comment

