Homeதமிழ்நாடுமாவட்ட செய்திகள்ஊட்டியில் மலையேறும் பயிற்சி முகாம்: பங்கேற்ற நாசரேத் மர்காஷிஸ் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா!

ஊட்டியில் மலையேறும் பயிற்சி முகாம்: பங்கேற்ற நாசரேத் மர்காஷிஸ் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா!

ஊட்டி நீலகிரி மலையில் நடைபெற்ற மலையேறும் சாரணர் பயிற்சி முகாமில் பங்கேற்ற நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் சார்பாக மாநில அளவிலான மலையேற்றம் மற்றும் வழிநடை பயண பயிற்சி உதகை மாவட்டம் குன்னூர் பகுதியில் நடைபெற்றது.

இம் மாநில அளவிலான சாரண சாரணியருக்கான மலையேறும் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி சாரணர் இயக்க மாணவர்களுக்கு பாராட்டு விழா பள்ளியில் வைத்து நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் குணசீலராஜ் தலைமை தாங்கினார். சாரணர் இயக்க பொறுப்பாசிரியர்கள் ஆபிரகாம் இம்மானுவேல், ஸ்டீபன் பிரேம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் ஜோஸ்வா சாம்துரை, கிருஷ்ண பாலாஜி, ஜிம் ஆக்னஸ், பிரசாந்த் மற்றும் பதினோராம் வகுப்பு மாணவர்கள் ஜெர்வின் ஜெபஸ், ராஜ குமரகுருபரன் ஆகியோர் ஊட்டி – குன்னூரில் நடைபெற்ற மலையேறும் பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்களை பள்ளி தாளாளரும் வழக்கறிஞருமான பிரபாகர் மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி தலைமையாசிரியர் சார்லஸ் திரவியம், கணித ஆசிரியர் நேசகுமார், இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் மற்றும் ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Must Read

spot_img