Homeதமிழ்நாடுமாவட்ட செய்திகள்நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்று நடும் விழா

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்று நடும் விழா

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் தேசிய பசுமைப் படையின் சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. உதவி தலைமை ஆசிரியர் சார்லஸ் திரவியம் மரக்கன்றினை நட்டு வைத்தார். தேசிய பசுமைப் படை பொறுப்பாசிரியர் அம்புரோஸ் சுகிர்தராஜ் முன்னிலை வகித்தார். பள்ளி நுழைவு வாயிலின் அருகில் சிறப்பு வாய்ந்த செண்பக மரக்கன்று நடப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு, மரங்கள் வளர்ப்பதின் அவசியம் குறித்தும், வளர்ந்த மரங்களை பாதுகாப்பதின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துக் கூறப்பட்டது. மரக்கன்று நடுவதற்கான ஏற்பாடுகளை தாளாளர் பிரபாகர், தலைமையாசிரியர் குணசீலராஜ் வழிகாட்டுதலின்படி, பசுமை மன்ற பொறுப்பாசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ்,விவசாய பிரிவு தொழிற்கல்வி ஆசிரியர் ஜெய்சன் பாபு ஆகியோர் செய்திருந்தனர். ஓவியக்கலை ஆசிரியர் அலெக்சன் கிறிஸ்டோபர், உடற்கல்வி ஆசிரியர் தனபால், தேசிய மாணவர் படை அலுவலர் சுஜித் செல்வசுந்தர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை பிற ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பாராட்டினர்.

Must Read