Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    கும்பகோணத்தில் அமைச்சர் செய்த செயலால் நெகிழ்ந்து போன மக்கள்! வியாபாரம் மந்தமாக உள்ளது எனக் கூறிய கீரை வியாபாரி உடனே அனைத்து கீரைகளையும் வாங்கிய அமைச்சர் வினோத்ரவி

    August 2, 2026

    கீழக்கொட்டையூரில் கும்பகோணம் வள்ளலார் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பணியேற்பு

    August 2, 2026

    பாதை பிரச்சினைக்கு தீர்வு கோரி எம்.எல்.ஏ. எஸ்.எம். சுகுமாரிடம் மனு

    August 2, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home»தமிழ்நாடு»மாவட்ட செய்திகள்»உல்லாசத்துக்கு மறுத்த திருநங்கை…
    மாவட்ட செய்திகள்

    உல்லாசத்துக்கு மறுத்த திருநங்கை…

    SahabudeenBy SahabudeenJuly 26, 2025No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    மதுபோதையில் வெறிச்செயலில் ஈடுபட்ட வாலிபர்

    கடலூர் மாவட்டம், புவனகிரியை அடுத்த பி.முட்லூர், எம்.ஜி.ஆர். சிலை அருகில் டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று காலையில் இந்த மதுக்கடையின் பின்புறம் உள்ள சவுக்கு தோப்பில் திருநங்கை ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    திருநங்கையாக மாறுவதற்கு முன்பு இவர் 20 வயதில் மஞ்சு என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். 2 குழந்தைகள் உள்ளனர். 30 வயதுக்கு பிறகு திருநங்கையாக மாறிய கவியரசன் தனது பெயரை காவியா என மாற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது. அவரை யாரோ மர்ம நபர் மதுபாட்டிலை உடைத்து குத்தியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்து இருப்பது தெரியவந்தது. ஆனால் அவரை கொலை செய்த நபர் யார்? எதற்காக அவர் கொலை செய்தார் என்ற விவரம் எதுவும் உடனடியாக தெரியவில்லை?

    இதையடுத்து காவியாவின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து திருநங்கையை கொலை செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வந்தனர். அப்போது காவியாவை கொலை செய்தது பி.முட்லூரை சேர்ந்த மணிகண்டன் மகன் வசந்தராஜா(19) என்பது தெரியவந்தது. இதையடுத்து வீட்டில்இருந்த அவரை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது வசந்தராஜா போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    கூலி வேலை செய்து வரும் நான் நேற்று முன்தினம் இரவு மதுக்கடையில் மது அருந்திக்கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த திருநங்கை காவியாவிடம் ரூ.200 கொடுத்து உல்லாசத்துக்கு அழைத்தேன். ஆனால் அவள் வர மறுத்ததோடு காலால் என்னை எட்டி உதைத்தாள். இதனால் ஆத்திரம் அடைந்த நான் அருகில் கிடந்த மதுபாட்டிலை எடுத்து உடைத்து அவளது வயிறு மற்றும் தோள்பட்டையில் குத்தினேன்.

    பின்னர் காலால் எட்டி உதைத்து கழுத்தை நெரித்து விட்டு அங்கிருந்து வீட்டுக்கு சென்று விட்டேன். அவள் இறந்து இருக்கமாட்டாள் என்று தான் நான் நினைத்தேன். ஆனால் நேற்று காலையில் தான் காவியா இறந்து போனது எனக்கு தெரியவந்தது. பின்னர் போலீசார் என்னை கைது செய்து விட்டனர். இவ்வாறு அவர் கூறினார். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Post Views: 687
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    கும்பகோணத்தில் அமைச்சர் செய்த செயலால் நெகிழ்ந்து போன மக்கள்! வியாபாரம் மந்தமாக உள்ளது எனக் கூறிய கீரை வியாபாரி உடனே அனைத்து கீரைகளையும் வாங்கிய அமைச்சர் வினோத்ரவி

    August 2, 2026

    கீழக்கொட்டையூரில் கும்பகோணம் வள்ளலார் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பணியேற்பு

    August 2, 2026

    பாதை பிரச்சினைக்கு தீர்வு கோரி எம்.எல்.ஏ. எஸ்.எம். சுகுமாரிடம் மனு

    August 2, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,077)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (6)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (250)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (393)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.