மாண்புமிகு ஐ பெரியசாமி அவர்களின் வீட்டில் சோதனை என்பது வாக்கு திருட்டை மறைப்பதற்காக? ஜிஜி சிவா கடும் கண்டனம்
தேசிய முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் ஜி ஜி சிவா அவர்கள் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்
மாண்புமிகு அமைச்சர் ஐ பெரியசாமி அவர்களின் வீட்டில் இன்று அமலாக்கத்துறை சாதனை செய்திருப்பது இந்தியா முழுவதும் மத்திய பாஜக ஆட்சியில் அமருவதற்கு வாக்குத்திருட்டே காரணம் என்றும் இதற்கு இந்திய தேர்தல் ஆணையம் உடந்தையாக இருந்தது என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் மக்கள் மத்தியில் ஊடகத்தின் மத்தியிலும் அம்பலப்படுத்தினார் இது உலக அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்க கூடிய இந்த சூழலில் இந்தியாவில் பாஜகவிற்கு எதிராக இருக்கக்கூடிய மாநிலங்களில் அமலாக்கத்துறை தொடர்ந்து பதவியில் இருக்கும் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை என்கின்ற பெயரில் அச்சுறுத்தி வருவது 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இப்போது இந்த வாக்கு திருட்டை மறைப்பதற்காக திசை திருப்புவதற்காக தூய்மையான கரங்களுக்கு சொந்தக்காரராகவும் மேலும் நடந்து முடிந்த 2021 சட்டமன்ற பொது தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்திலும் தன்னை எதிர்த்து போட்டியிட்ட 19 வேட்பாளர்களை டெபாசிட் இழக்க செய்தும் சாதனை படைத்தார் அப்போது அவர் வெற்றி பெற்ற ஆத்தூர் தொகுதியில் மக்கள் எந்த அளவிற்கு இவர் மீது நம்பிக்கையும் விசுவாசத்தையும் வைத்திருக்கிறார் என்பதை இதை வைத்து தெரிந்து கொள்ளலாம் ஆகவே தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற வேண்டும் என்கின்ற அடிப்படையிலும் இதற்கு முட்டுக்கட்டையாக இருக்கக்கூடிய திமுகவை அச்சுறுத்தும் வகையிலும் இதுபோன்று தொடர்ந்து அமைச்சர்கள் வீட்டில் சோதனை என்கின்ற பெயரில் அத்து மீறுவது இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது மேலும் இந்த சோதனையின் காரணமாக ஒருபோதும் தவறே செய்யாத ஐ பெரியசாமி அவர்கள் கவலைப்பட போவதில்லை மேலும் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு தளபதி அவர்களும் இதை கண்டு அஞ்சப் போவதில்லை என்பதனை பாஜக விற்கும் அதன் துணை அமைப்பு போல செயல்படும் அமலாக்கத் துறைக்கும் இதன் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன் அது மட்டுமல்ல அமலாக்க துறையின் அத்துமீறல்கள் என்பது மாண்புமிகு அமைச்சர் ஐ பெரியசாமி அவர்கள் வீட்டில் மட்டுமல்லாது இளைஞர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்துவரும் அவருடைய மகன் ஐபி செந்தில்குமார் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் வீட்டிலும் துஷ்பிரயோகம் செய்து சோதனை செய்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது இதுபோன்ற சித்து விளையாட்டை தொடர்ந்து இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழ்நாட்டிலே வாழக்கூடிய மக்கள் கூர்ந்து கவனித்து வருகிறார்கள் பாஜக சங் பரிவார் சங்கங்களுக்கு வருகின்ற 2026 சட்டமன்ற பொது தேர்தலில் சவுக்கடி கொடுத்து படுதோல்வி பரிசாக கொடுப்பார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் இதுபோன்று அமலாக்கத்துறை தனது பதவியை தவறாக பயன்படுத்தி அச்சுறுத்தி வரக்கூடிய தொடர் அத்துமீறல்களை உச்சநீதிமன்ற நீதி அரசர் தனிக்கவனம் செலுத்தி ஆளும் பாஜகவிற்கு ஆதரவாக திட்டமிட்டு செயல்படும் உயர் அதிகாரிகளை கைது செய்து இந்தியாவில் ஜனநாயகம் இருக்கிறது என்பதனை உறுதிப்படுத்திட வேண்டுமென இதன் வாயிலாக தேசிய முன்னேற்ற கழகத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு ஜி ஜி சிவா குறிப்பிட்டு இருக்கிறார்
