Homeதமிழ்நாடுமாவட்ட செய்திகள்மசூதியை லாரிகளை வைத்து மறைப்பது நியாயமா? ஜி ஜி சிவா விமர்சனம்

மசூதியை லாரிகளை வைத்து மறைப்பது நியாயமா? ஜி ஜி சிவா விமர்சனம்

மசூதியை லாரிகளை வைத்து மறைப்பது நியாயமா? ஜி ஜி சிவா விமர்சனம்

தேசிய முன்னேற்றக் கழக நிறுவன தலைவரும் திமுக தோழமையுமான ஜி ஜி சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில்

தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா முடிந்து இன்று கடைசி நாளாக வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை அந்தந்த மாவட்டங்களில் கரைக்கும் பணிகள் நடந்து வருகிறது அதன்படி சென்னையில் இருக்கும் விநாயகர் சிலைகளை கடற்கரையில் கரைக்கும் பணிகள் காலையிலிருந்து தொடர்கிறது தமிழ்நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் அதன் அடிப்படையில் இன்று பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக விநாயகர் சிலைகளை கடலிலே கரைக்க ஊர்வலமாக செல்ல இருப்பதினால் அதே பூந்தமல்லி நெடுஞ்சாலை ஓரமாக இருக்கும் பழமை வாய்ந்த இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலமாக இருக்கும் மசூதியும் இருக்கிறது இந்த மசூதி கொரோனா பெருந் தொற்று காலத்திலும் சரி சென்னையில் மிகப்பெரிய அளவில் மழை வெள்ளம் பாதிப்பு ஏற்படுகின்ற அந்த தருணத்திலும் சரி பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவி செய்து வருவது அனைத்து முன்னணி தொலைக்காட்சியின் வாயிலாக பல செய்திகள் ஆதாரம் இருக்கிறது அப்படி இருக்கஆவடி மற்றும் பூந்தமல்லி காவல்துறையினர் திடீரென்று மசூதி சுற்றியும் மிகப்பெரிய அளவில் இருக்கும் கண்டெய்னர் லாரிகளை ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்தி மசூதியை மறைக்கும் செயலை செய்திருக்கிறது இந்த செயலுக்கு கூறும் காரணம் விநாயகர் சதுர்த்தி சிலைகள் ஊர்வலமாக மசூதி வழியாக செல்லுகிறது அதன் அடிப்படையில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மசூதி சுற்றி மிகப் பெரிய கண்டெய்னர் லாரிகளை நிறுத்தி இருப்பதாக சொல்லப்படுகிறது இந்த செயல் மிகவும் கண்டனத்துக்குரியது காரணம் வடக்கில் இருக்கும் பாஜக முதல்வராக இருக்கும் மாநிலங்களில் இஸ்லாமியர்கள் தொழுவும் மசூதிகள் மற்றும் கிருத்துவ தேவாலயங்கள் இருக்கும் பகுதி வழியாக திட்டமிட்டு பாஜக ஆர் எஸ் எஸ் சங்பரிவார் சங்கங்கள் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தி மிகப் பெரிய அளவில் கலவரங்களை ஏற்படுத்தி அரசியல் ஆதாயத்தை தேடியும் தமது மத வன்மத்தை இஸ்லாமியர்கள் மீது திணித்தும் அதில் ஆனந்தம் அடைந்தும் வருடா வருடம் இது போன்ற செயலை செய்து வருவது அனைவரும் அறிந்ததுதான் ஆனால் அமைதி பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டில் இதுபோன்று எந்த இடத்திலும் பாஜக சங்கரி சங்கங்கள் தனது சித்து விளையாட்டுகளை நடத்த முடியாது என்கின்ற நிலைத் தொடர்கிறது இங்கே 90 சதவீதம் பேர் அனைத்து மதத்தினரும் ஒரு குடும்ப உறவாக பழகி வருவது தான் இதற்கு முக்கிய காரணம் ஆனால் சமீப காலமாக பாஜக தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் கட்சியை வலுப்படுத்தி ஆட்சியில் பங்கு வேண்டும் என்கின்ற நிலைப்பாடு எடுத்திருப்பதினால் இங்கே ஏதாவது கலவரம் செய்திட வேண்டும் அதிலும் குறிப்பாக இஸ்லாமியர்களின் மீது கோரத்தாண்டவத்தை கட்டவிழ்த்துவிட்டு இந்து என்கின்ற மத உணர்வை தூண்டி அரசியல் லாபம் காணலாம் என்கின்ற அடிப்படையில் திட்டம் திட்டி வருகிறது ஆனால் தமிழ்நாட்டில் சமூக நீதி அடிப்படையில் திமுக கட்சி நடத்தையும் தற்போது ஆட்சி நடத்தையும் மிகச் சிறப்பான முறையில் வெற்றி கண்டு கொண்டிருக்கும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் செயல்பாட்டினாலும் மேலும் ஒவ்வொரு வருடமும் தமிழ்நாடு காவல்துறையினாலும் மிகச் சிறப்பான முறையில் பாதுகாப்பு பணி செய்து சங்பரிவார் சங்கங்களின் திட்டத்தை முறியடித்து மக்களை பாதுகாத்து வருகிறது அப்படி இருக்கும் சூழ்நிலையில் இன்று பூந்தமல்லி நெடுஞ்சாலை அமைந்திருக்கும் மசூதியை கண்டெய்னர் லாரிகளை வைத்து மூடி மறைக்க முயற்சி செய்திருப்பது தமிழ்நாடு காவல்துறையினர் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வலுவிழந்து காணப்படுவதாக அமைந்திருக்கிறது சங்பரிவார் சங்கங்கள் பாஜகவினருக்கு பயந்து இந்த நடவடிக்கை எடுத்திருப்பதாக மக்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறி இருக்கிறது மசூதிகளை இடிப்பதும் மசூதிகளை தாக்குவதும் மசூதிகளை மூடி மறைப்பதும் வடக்கிலே தொடர்ந்து இருக்கும் ஒரு கலாச்சாரமாகவே இருந்து ஒரு சூழ்நிலையில் திராவிட மண் நீதி மண் என ஆட்சி செய்து வரும் இந்த தருணத்தில் இதுபோன்று செயலை காவல்துறையினர் செய்திருப்பது ஏற்புடையதல்ல இப்படி செய்தால் மேலும் மதக்கலவரக்காரர்களுக்கு சாதகமாகத்தான் ஒவ்வொரு வருடமாக மாறுவதற்கு வாய்ப்பாக அமையும் என்பதனை தமிழ்நாடு காவல்துறை சிந்தித்துப் பார்த்திருக்க வேண்டும் இது சம்பந்தமாக தமிழ்நாடு முதலமைச்சர் வெளிநாடு சுற்றுப்பயணம் முடித்து தமிழகம் திரும்பியதும் நேரில் சந்தித்து முறையிடவும் தமது தலைமையிலான முன்னணி பொறுப்பாளர்கள் வழக்கறிஞர்கள் முடிவெடுத்திருக்கிறோம் ஏனென்றால் இது அடுத்த வருடம் தொடரக்கூடாது என்பதினாலும் எந்த நிலையிலும் பாஜக சங்க பரிவார் சங்கங்களுக்கு காவல்துறை சற்றும் குறையாத வண்ணம் இருக்க வேண்டும் என்கின்ற அடிப்படையினாலும் இந்த சந்திப்பு நடத்த இருக்கிறோம் என்பதனை தெரிவித்து தமிழ்நாட்டில் ஒரு பதட்ட நிலையை கொண்டு வர வேண்டும் என்கின்ற அரசியல் லாபத்திற்காக திட்டம் தீட்டி வரும் பாஜக சங் பரிவார சங்கங்களுக்கு தேசிய முன்னேற்றக் கழகத்தின் சார்பாக கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என இவ்வாறு ஜி ஜி சிவா அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்

Must Read

spot_img