Homeதமிழ்நாடுமாவட்ட செய்திகள்தேசிய முன்னேற்றக் கழகம் நிறுவனர் தலைவர் ஜி ஜி சிவா வெளியிட்டுள்ள இரங்கல்

தேசிய முன்னேற்றக் கழகம் நிறுவனர் தலைவர் ஜி ஜி சிவா வெளியிட்டுள்ள இரங்கல்

மாண்புமிகு தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான உயர்திரு தளபதி முக ஸ்டாலின் அவர்களின் சம்மந்தியும் மதிப்பிற்குரிய பாசமிகு சகோதரர் தமிழக முதலமைச்சர் அவர்களின் மருமகன் உயர்திரு சபரீசன் அவர்களின் தந்தையுமான பழக எளிமையானவர் மனிதநேய பற்றானவர் எப்போதும் அன்புள்ளத்தோடு அரவணைத்து பேசுபவர் உயர்திரு வேதமூர்த்தி அய்யா அவர்கள் இயற்கை அடைந்தார் என்கின்ற துயர செய்தி கேட்டு மனம் வேதனை அடைந்தது ஏற்க மறுத்தது விளம்பர வெளிச்சமே இல்லாமல் அவர் செய்த தொண்டுகள் தாராளம் அவரால் பயன் பெற்று உதவியை பெற்றவர்கள் யாராலும் அப்பேற்பட்ட நல் உள்ளம் படைத்தவர் நம்மை விட்டு பிரிந்ததை மனம் நம்ப மறுக்கிறது இந்த இக்கட்டான நேரத்தில் ஐயாவை பிரிந்து வாடும் ஐயாவின் குடும்பத்தாருக்கும் தமிழக முதலமைச்சர் தளபதி அவர்களின் குடும்பத்தாருக்கும் தந்தையை பிரிந்து வாடும் திரு சபரீசன் அவர்களுக்கும் மற்றும் உற்றார் உறவினர் அவர் மீது பற்று கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொண்டு கனத்த இதயத்தோடு அண்ணாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் ஜி ஜி சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்

Must Read