Homeதமிழ்நாடுமாவட்ட செய்திகள்அந்தரங்க உறுப்பை படம் பிடித்து மாணவனுக்கு அனுப்பிய கணித ஆசிரியர்… அடுத்து நடந்த பரபரப்பு

அந்தரங்க உறுப்பை படம் பிடித்து மாணவனுக்கு அனுப்பிய கணித ஆசிரியர்… அடுத்து நடந்த பரபரப்பு

திருப்பூர் மங்கலம் சாலை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 17 வயது மாணவன் ஒருவர் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக அந்த சிறுவன் அதிகப்படியாக செல்போன் பயன்படுத்தி வந்தார். இதனால் சந்தேகமடைந்த அந்த சிறுவனின் பெற்றோர் சிறுவனிடம் கேட்டனர்.

அப்போது அந்த சிறுவன் தனது கணித ஆசிரியரான ஆதீஸ் (வயது 30) என்பவரிடம் பேசுவதாக தெரிவித்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அந்த சிறுவனின் தந்தை சிறுவனுடைய செல்போனை சோதனை செய்தார். அதில் கணித ஆசிரியர் ஆதீஸ், தனது அந்தரங்க உறுப்பை படம் பிடித்து இன்ஸ்டாகிராம் மூலம் சிறுவனுக்கு அனுப்பியது தெரியவந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுவனின் தந்தை, திருப்பூர் மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆதீஸை பிடித்து விசாரித்தனர்.

போலீசார் விசாரணையில் ஆதீஸ் சிறுவனுக்கு அந்தரங்க உறுப்பை படம் பிடித்து இன்ஸ்டாகிராம் மூலம் அனுப்பியதை ஒப்புக்கொண்டார். மேலும் மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ஆதீசை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Must Read