Homeதமிழ்நாடுமாவட்ட செய்திகள்அதிர்ச்சி சம்பவம்: தந்தை புதிதாக வாங்கிய ஆட்டோவில் ஜாலியாக சென்ற சிறுமி.. அடுத்து நடந்த விபரீதம்

அதிர்ச்சி சம்பவம்: தந்தை புதிதாக வாங்கிய ஆட்டோவில் ஜாலியாக சென்ற சிறுமி.. அடுத்து நடந்த விபரீதம்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்த தில்லாம்பட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார். ஆட்டோ டிரைவர். இவருக்கு கிரேசிகா வயது (9)என்ற மகளும், லிதன் ராம் (7) என்ற மகனும் உள்ளனர். கிரேசிகா அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் ராஜ்குமார் சொந்தமாக ஒரு புதிய ஆட்டோ வாங்கினார். இந்த நிலையில், நேற்று குழந்தைகள் இருவரும் புதிய ஆட்டோவில் சுற்றிபார்க்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து ராஜ்குமார் மகனையும், மகளையும் ஆட்டோவில் அழைத்துக் கொண்டு அப்பகுதியில் சுற்றி காண்பித்துள்ளார். அப்போது, தில்லாம்பட்டி அருகே உள்ள வெள்ளகுளம் என்ற பகுதியில் சுற்றியபோது, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த கிரேசிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ராஜ்குமாரும், லிதன் ராமும் லேசான காயத்துடன் தப்பினர். மகள் தனது கண்முன்னே இறந்ததை பார்த்து ராஜ்குமார் கதறி அழுதது பார்ப்போரையும் கண்கலங்க செய்தது. இதுகுறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிரேசிகாவின் உடலைகைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Must Read

spot_img