Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளி வளாகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    April 14, 2026

    மீண்டும் மீண்டுமா…, தவெகவுக்கு பதிலாக பாஜக வேட்பாளருக்கு வாக்கு கேட்ட விஜய்..!

    April 5, 2026

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » சாம்சனை வாங்க ஜடேஜா, சாம் கரனை கொடுத்த சென்னை அணி…அதிர்ச்சியில் ரசிகர்கள்
    விளையாட்டு

    சாம்சனை வாங்க ஜடேஜா, சாம் கரனை கொடுத்த சென்னை அணி…அதிர்ச்சியில் ரசிகர்கள்

    SahabudeenBy SahabudeenNovember 15, 2025No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந்தேதி அபுதாபியில் நடைபெறுகிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை 10 அணிகளும், ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு முன்பாக பரஸ்பர பேச்சுவார்த்தையின் மூலம் வீரர்கள் வர்த்தக பரிமாற்றம் நடந்து வருகிறது. முன்னதாக கடந்த சீசனில் (18-வது சீசன்) ஐ.பி.எல். வரலாற்றில் வெற்றிகரமானஅணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடிப்பது இதுவே முதல் முறையாகும்.

    இந்த நிலையில் சென்னை அணி 6 வீரர்களை விடுவிக்க திட்டமிட்டுள்ளது. சென்னை அணியில் இருந்து டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரன், ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, விஜய் சங்கர், ஜேமி ஓவர்டன் ஆகியோர் விடுவிக்கப்பட உள்ளனர்.

    முன்னதாக சிஎஸ்கே நிர்வாகம், சஞ்சு சாம்சனை வாங்க ராஜஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அவருக்கு பதிலாக முன்னணி நட்சத்திர ஆல்-ரவுண்டர்களான ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன் ஆகியோரை தரும்படி ராஜஸ்தான் அணி கேட்டது.

    இந்த பேச்சுவார்த்தை நீண்ட நாட்களாக நடந்து வந்தது. ஆனால் உறுதி செய்யப்படாமல் இருந்தது. ஜடேஜா நீண்ட காலமாக சென்னை அணிக்கு விளையாடி வருகிறார். அணியின் முக்கிய வெற்றிகளுக்கு அவர் பங்காற்றியுள்ளார்.மேலும் சென்னை அணி ரசிகர்கள் மத்தியில் தோனிக்கு அடுத்தபடியாக கொண்டாடப்படுபவர் ஜடேஜா. இதனால் அவர் சென்னை அணியில் இருப்பார். டிரேடிங் செய்யப்படமாட்டார் என கூறப்பட்டது.

    இந்த நிலையில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக முன்னணி ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன் ஆகியோரை கொடுக்க 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்வந்துள்ளது. ஜடேஜா மற்றும் சாம் கரனை கொடுத்து சஞ்சு சாம்சனை டிரேடிங் முறையில் வாங்க சென்னை அணி சம்மதம் தெரிவித்துள்ளது. இரு அணிகளுக்கு இடையே டிரேடிங் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துள்ளது.

    ரவீந்திர ஜடேஜா 2012-ம் ஆண்டில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடுகிறார். 2023-ம் ஆண்டு ஐ.பி.எல்.-ல் குஜராத்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் ஜடேஜா கடைசி பந்தில் பவுண்டரி அடித்து வெற்றி தேடித்தந்ததை மறந்து விட முடியாது. கடந்த சீசனில் அவரை ரூ.18 கோடிக்கு சென்னை அணி தக்க வைத்திருந்தது. அப்படிப்பட்ட அவரை சிஎஸ்கே வேறு அணிக்கு மாற்ற உள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மற்றொரு ஆல் ரவுண்டரான சாம் கர்ரனை ரூ.2.4 கோடிக்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

    Post Views: 114
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    வரலாறு படைத்த இந்திய மகளிர் அணி: நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாட்டம்

    November 3, 2025

    தோனி, சி.எஸ்.கே அல்ல… ஐ.பி.எல்.

    May 6, 2025

    ஐ.பி.எல்.லில் குறைந்த ரன் வித்தியாசத்தில் 5 முறை வெற்றியை தவற விட்ட சென்னை அணி

    May 4, 2025
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,067)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (182)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (281)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.