Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    கும்பகோணம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்

    July 29, 2026

    பிலிப்பைன்ஸில் நடைபெற்ற சர்வதேச சட்ட மாநாட்டில் இந்திய வழக்கறிஞர் சங்கம் சார்பில் பாரதி அம்பிகாபதி பங்கேற்பு

    July 29, 2026

    யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால்.. குறிஞ்சி பூக்களைப் பார்வையிட பொதுமக்களுக்குத் தடை

    July 26, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » கள்ளக்காதலால் கொடூரம்… கணவரை கொழுந்தனுடன் சேர்ந்து கொன்ற மனைவி – அதிர்ச்சி சம்பவம்
    இந்தியா

    கள்ளக்காதலால் கொடூரம்… கணவரை கொழுந்தனுடன் சேர்ந்து கொன்ற மனைவி – அதிர்ச்சி சம்பவம்

    SahabudeenBy SahabudeenNovember 15, 2025No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    மராட்டிய மாநிலம் ஜல்னா மாவட்டத்தில் உள்ள பத்னாபூர் தாலுகா சம்தானா கிராமத்தை சேர்ந்தவர் பரமேஸ்வர். இவரது மனைவி மனிஷா (25 வயது). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பரமேஸ்வர் கடந்த மாதம் திடீரென மாயமானார். அவரது குடும்பத்தினர் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. கணவர் காணாமல் போய் விட்டதாக மனிஷா போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

    இதற்கிடையே நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள அணையில் இருந்து ஒரு ஆணின் உடல் மீட்கப்பட்டது. விசாரணையில் அது பரமேஸ்வரின் உடல் என்பதும், அவர் கொலை செய்யப்பட்டு அணையில் வீசப்பட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் தீவிர விசாரணையை தொடங்கினர். இதில் கணவர் காணாமல் போய் விட்டதாக புகார் கொடுத்த மனிஷாவின் வாக்குமூலம் முன்னுக்கு பின் முரணாக இருந்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

    இதில் மனிஷாவுக்கும், அவரது கணவரின் இளைய சகோதரர் தியானேஸ்வருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்தது தெரியவந்தது. பரமேஸ்வர் இவர்களின் கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இது கள்ளக்காதல் ஜோடிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. தங்கள் உறவுக்கு தடையாக இருக்கும் பரமேஸ்வரை கொலை செய்ய இருவரும் திட்டம் தீட்டினர்.

    அதன்படி கடந்த மாதம் 15-ந்தேதி இரவு தியானேஸ்வர் தனது அண்ணனை தலையில் கல்லால் தாக்கி உள்ளார். மனிஷா ஒரு துணியால் அவரது கழுத்தை நெரித்துள்ளார். இதில் அவர் துடிதுடிக்க பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் இருவரும் உடலை ஒரு பாலித்தீன் பையில் சுற்றி, அதில் கல்லை கட்டி அணையில் வீசியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மனிஷாவையும் அவரது கொழுந்தனான தியானேஸ்வரையும் கைது செய்தனர்.

    Post Views: 534
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    நந்தன் நிலேகனி தலைமையில் தேர்வு சீர்திருத்தங்களுக்கான உயர்மட்டக் குழு:

    July 26, 2026

    மோடி செய்தியாளர்கள் சந்திப்பு

    July 20, 2026

    மம்தாவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!

    July 20, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,077)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (6)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (250)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (385)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.