செய்தியாளரிடம் தகாத வார்த்தைகள்,அநாகரிகமான முறையில் பேசிய ஆமைக்கறி சீமானை ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
புதுச்சேரியில் செய்தியாளரை தகாத வார்த்தைகளில் திட்டிய சீமான் மற்றும் அவர் மீது தாக்குதல் நடத்திய நாதக ஆதரவாளர்கள் மீது வில்லியனூர் காவல் நிலையத்தில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு.
தகாத வார்த்தையில் திட்டுதல், தாக்குதல் மற்றும் கொலை மிரட்டல் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
“ஏய் பைத்தியம் வெளியே போடா” என்று ரிப்போர்ட்டரை சீமான் பேசினார். மேலும், பெரிய ம–ரா? வெங்காயம் என்றும், பொது வெளியில் சீமான் அநாகரிகமாக பேசிய ஆமைக்கறி சீமானை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று ஊடக உரிமை குரல் பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பு சங்கம் காவல்துறை தலைவர் அவர்களை கேட்டுக்கொள்கிறோம்.
சீமான் மீது வழக்கு பதிவு செய்தால் மட்டும் போதாது உடனடியாக கைது செய்தால் மட்டுமே அடுத்த செய்தியாளரிடம் அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடமாக அமையும்.
இனி வரும் காலங்களில் செய்தியாளர்களிடம் சீமான் எப்படி பேச வேண்டும் என்பதையும் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

