தேசிய முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவரும் திமுக கூட்டணி கட்சியுமான ஜிஜி சிவா வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்
காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பு என தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் அவர்கள் கூட்டத்தில் பேசும்போது வழக்கம்போல எவ்வித ஆதாரம் இன்றி மத்திய பாஜக அரசு சொல்லிக் கொடுத்தது போல ஆளும் திமுக அரசை பற்றி வாய்க்கு வந்ததை பேசியிருக்கிறார் குறிப்பாக தமிழ்நாட்டு மக்கள் ஏதோ நடிகர் விஜய்க்கு ஆதரவாக இருப்பது போன்றும் 2026 இல் ஆட்சி அமைக்க போவது போன்றும் மிகப்பெரிய நகைச்சுவையை முன்னெடுத்து பேசியிருக்கிறார் அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் வசிக்கும் பெரும் பகுதி மக்களும் தமிழகத்தின் முன்னணி அரசியல் கட்சிகளும் நடிகர் விஜய் அவர்களின் அரசியல் முதிர்ச்சி இல்லாததை பார்த்தும் த வெ க விண் தொண்டர்களின் மனநிலையை பார்த்தும் தற்குறி என்றும் அணில் குஞ்சுகள் என்றும் தொடர்ந்து சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் பொதுமக்கள் கூடும் இடத்திலும் பதிவு செய்து வருகிறார்கள் நிலைமை இப்படி இருக்க ஏதோ திமுக தமிழ் நாட்டு மக்களை தான் தற்குறிகள் என்று சொல்லுகிறார்கள் என மடைமாற்றுப் பேச்சியை பேசியிருக்கிறார் இந்த பேச்சின் மூலம் மீண்டும் விஜய் தன்னை தற்குறி என நிரூபணம் செய்திருக்கிறார் அது மட்டுமல்லாமல் மக்களால் தேர்வு செய்யப்பட்டு தமிழக இளைஞர்களும் பொதுமக்களும் தாய்மார்களும் தங்களது வீட்டுப் பிள்ளையாக நினைத்து பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களை பற்றி மறைமுகமாக ஏளனம் செய்யக்கூடிய வகையில் பேசி இருக்கிறார் இந்த இடத்திலும் தம்மை தற்குறி என மீண்டும் மீண்டும் நிரூபணம் செய்து இருக்கிறார் விஜய் அவர்கள் அது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டு மக்களிடத்தில் தான் செய்த நன்மைகள் எதுவும் இல்லாததினால் அசிங்கப்பட்டு அவமானப்பட்டு அதை மூடி மறைத்து விஜய் அவர்கள் செல்லும் இடமெல்லாம் திமுகவை பற்றி அவதூறாக பேசினால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என தவறாக நினைத்து தம்மை இன்னொரு முறை மீண்டும் தற்குறி என நிறுபனம் செய்திருக்கிறார் கரூரில் திட்டமிட்டு கூட்ட நெரிசலை குழுமச்செய்து சுமார் 41 பெயர்கள் மரணம் அடைவதற்கு தாமும் காரணம் என ஒரே ஒரு சதவீதம் கூட நினைத்து வருந்தாமல் எப்போதும் போன்று தமிழ்நாட்டு மக்கள் முட்டாள்கள் என விஜய் அவர்கள் நினைத்து இன்று இந்தியாவே திரும்பிப் பார்க்கக் கூடிய வகையிலே திராவிட மாடல் அரசாக மாண்புமிகு முதலமைச்சர் தளபதி மு க ஸ்டாலின் அவர்கள் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் தனது டெல்லி எஜமானை திருப்தி படுத்த மனசாட்சியே இல்லாமல் 41 பெயர்கள் இறந்ததை கூட கவனத்தில் கொள்ளாமல் மீண்டும் தனது நடிப்பு அரசியலை மக்கள் மத்தியில் நிரூபணம் செய்திட பொய்யும் புரட்டையும் பேசியிருக்கிறார் விஜய் அவர்கள் விஜய் அவர்களின் கபட நாடகத்தை கரூர் மாவட்டம் மக்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் கூர்ந்து கவனித்து வருகிறார்கள் விஜய் அவர்கள் முழுக்க முழுக்க பாஜகவின் தயாரிப்பு என மக்கள் எப்பொழுதே முடிவு செய்துவிட்டதை கூட விஜய் அவர்கள் உணராமல் தனது நடிப்பை மக்கள் மன்றத்தில் தொடர செய்திருப்பது தமிழக மக்கள் சொல்வது போல தற்குறியாகத்தான் செயல்பட்டு வருவது உண்மையாகிறது ஆகவே விஜய் அவர்கள் தமிழ்நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும் திமுக அரசை பற்றியோ சமூக நீதி பற்றியோ பேச எந்த தகுதியும் இல்லை எனவும் இனி தொடர்ந்து இதே போன்ற வன்மத்தை மக்கள் மத்தியில் பேசி வருமேயானால் நடிகர் விஜய் அவர்கள் நிற்கும் தொகுதியில் கூட டெபாசிட் வாங்காத வண்ணம் மக்கள் சவுக்கடி கொடுத்து பாடம் கற்பிப்பார்கள் என்பதனை தெரிவித்து நடிகர் விஜய் அவர்களுக்கு தேசிய முன்னேற்ற கழகத்தின் சார்பாக வன்மையான கண்டனத்தை பதிவு செய்கிறேன் என ஜிஜி சிவா அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்

