கேரள தலைவர் AM முஸ்தாபாவை சந்தித்த ஜி ஜி சிவா! அரசியலில் பரபரப்பு?
தேசிய முன்னேற்றக் கழகம் மற்றும் நேஷனல் டெவலப்மெண்ட் பார்ட்டியின் தலைவர் ஜி ஜி சிவா திடீரென நட்சத்திர விடுதியில் கேரள மாநில NDP யின் மாநில தலைவர் டாக்டர் AM முஸ்தபாவை சந்தித்து பேசியது கேரள அரசியலில் பேசும் பொருளாக மாறி இருக்கிறது கேரளாவில் தற்பொழுது முக்கியத்துவம் வாய்ந்த அனைவரும் எதிர்பார்த்து இருக்கும் முனிசிபாலிட்டி தேர்தல் நடைபெற இருக்கும் இந்த சூழலில் தமிழகத்தில் ஆளும் அரசாக இருக்கும் திமுக கட்சியை யார் விமர்சனம் செய்தாலும் கூட்டணியில் பெரும் கட்சிகள் இருந்த போதும் இளம் வயதில் கட்சியை வழிநடத்தி தோழமை உணர்வுக்கு மதிப்பளித்து பாஜக தவெக அதிமுக என எதிர்க்கட்சிகளை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார் இங்கு ஒரு சாரார் இதற்கு ஆதரவும் மற்றொருபுறம் எதிர்ப்பும் தொடர்ந்து சமூக வலைத்தளங்கள் மூலமாக பரவி வரும் இந்நேரத்தில் NDP யின் கேரள மாநில தலைவரை சந்தித்து பேசி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக மாறி இருக்கிறது மேலும் கேரள மாநிலத்தில் திமுக கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் KR முருகேசன் அவர்களின் தலைமையில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் திமுக சார்பாக வேட்பாளர்களை களம் காண செய்திருப்பது மேலும் கேரளா அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் இங்கு திமுகவிற்கு ஆதரவாக செயல்பட்டு வரும் கடும் விமர்சனங்களுக்கும் ஆதரவிற்கும் பேர் போன ஜி ஜி சிவா என்ன நோக்கத்திற்காக கேரள மாநிலத் தலைவரை சந்தித்தார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது இந்த செய்தியை கேள்விப்பட்டு கேரளாவில் ஒரு சில பத்திரிகைகள் கட்டுரைகள் எழுதி வருவது மிகவும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது அது மட்டுமல்ல தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் ஜி ஜி சிவா கேரளத்தைச் சார்ந்த தலைவரை சந்தித்தது ஏன்? எனவும் அரசியல் முதிர்ச்சி இல்லாமல் ஏதாவது செய்யப் போய் அது ஆளும் அரசுக்கு சங்கடத்தை கொடுக்குமோ என திமுக ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள் பொறுத்திருந்து பார்ப்போம் உண்மை நிலவரம் என்னவென்று
கலாம் குரல் வார இதழ் நிறுவனர் மற்றும் வெளியிட்டார்கள்
அ.சகாப்தின்

