Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    பக்ரீத்தை முன்னிட்டு இஸ் லாமியர்களுக்கு துரோகம் ஜி ஜி சிவா கண்டனம்

    May 30, 2026

    பெட்ரோல், டீசல் விலை, வணிகப் பொருட்கள் விலை தொடர் உயர்வுக்கு எதிராக கும்பகோணத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம்

    May 30, 2026

    கட்சி தலைமைக்கு கட்டுப்படாத நிர்வாகிகளை களையெடுப்பாரா முதல்வர் ஜோசப் விஜய்..?”

    May 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » அரசு பஸ்கள் மோதலில் பலியான திருச்சி மாணவி.. கல்லூரிக்கு புறப்பட்டு வந்தபோது நேர்ந்த சோகம்
    மாவட்ட செய்திகள்

    அரசு பஸ்கள் மோதலில் பலியான திருச்சி மாணவி.. கல்லூரிக்கு புறப்பட்டு வந்தபோது நேர்ந்த சோகம்

    SahabudeenBy SahabudeenDecember 2, 2025No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இதில் காரைக்குடி அரசு மருத்துவமனையில் 4 பேர் உடல்கள் வைக்கப்பட்டு இருந்தன. அதில் ஒரு இளம்பெண்ணின் உடல் மட்டும் அடையாளம் காணப்படாமல் இருந்தது. இந்த நிலையில் நீண்ட விசாரணைக்கு பின்னர் அவர், திருச்சி மாவட்டம் சத்திரப்பட்டி கிராமத்தை சேர்ந்த டயானா(வயது 17) என்று தெரியவந்தது.

    இவர் காரைக்குடி அழகப்பா அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவர் கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார். விடுமுறைக்கு ஊருக்கு சென்றுவிட்டு மீண்டும் கல்லூரிக்கு திரும்பி வந்தபோது டயானா விபத்தில் சிக்கி உயிரிழந்து உள்ளார். இதுபற்றி மாணவி டயானாவின் பெற்றோருக்கு உடனடியாக தெரியவில்லை. விபத்து நடந்ததை கேள்விப்பட்டு, மகளின் செல்போனில் தொடர்பு கொண்டனர். ஆனால் போன் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் பஸ்கள் மோதலில் பலியான மாணவியின் உடலை போலீசார் புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளத்தில் வெளியிட்டனர். அதன்பின்னரே பெற்றோருக்கு இந்த தகவல் தெரியவந்தது. மகள் கல்லூரிக்கு சென்று இருப்பாள் என்று நினைத்திருந்த பெற்றோருக்கு அவர் இறந்த தகவல் பேரிடியாக அமைந்தது. அதன்பின்னர் பெற்றோர் அவரது உறவினர்கள் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு வந்தனர்.மகளை பிணமாக பார்த்து பெற்றோர் கதறியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பிரேத பரிசோதனைக்கு பிறகு மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    Post Views: 271
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    பெட்ரோல், டீசல் விலை, வணிகப் பொருட்கள் விலை தொடர் உயர்வுக்கு எதிராக கும்பகோணத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம்

    May 30, 2026

    கட்சி தலைமைக்கு கட்டுப்படாத நிர்வாகிகளை களையெடுப்பாரா முதல்வர் ஜோசப் விஜய்..?”

    May 27, 2026

    கும்பகோணத்தில் அம்பேத்கர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம்

    May 27, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,069)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (195)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (300)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.