இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் கடுமையான கண்டனம்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சிக்கந்தர் மலை விசயத்தில் உயர் நீதிமன்றம் மதுரை கிளை ஆரம்பத்தில் இருந்தே பாசிச சக்திகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.
நீதிபதி சுவாமிநாதன் அவர்கள் அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல், அரசியல் சாசனம் வகுத்த நீதியின் அடிப்படையில் இல்லாமல் ,பாசிச சக்திகள் என்ன நினைக்கிறார்களோ? அந்த அடிப்படையில் தற்போது உத்தரவு வழங்கி உள்ளது என்பது மிக பெரிய பாரபட்சமானது..
நீதியை குழி தோண்டி புதைக்கும் அநீதியான உத்தரவு..
காலம் காலமாக இருந்த நடைமுறைகளை தகர்த்து எறியும் வகையில், சிக்கந்தர் மலை மீது பாசிச சக்திகள் தீபம் ஏற்ற உத்தரவு என்பது வெந்த புண்ணில் மேலும் வேதனையை தருவது போல உள்ளது.
இதனால் மத நல்லிணக்கம் என்பது நீதிமன்றம் மூலமே இன்று கேள்வி குறியாகி உள்ளது..
உடனடியாக மதுரை உயர் நீதிமன்றக் கிளை இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
உடனடியாக தமிழ் நாடு அரசு இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.


