பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் தமிழ்நாடு அலகின் திருச்செந்தூர் சாரண மாவட்டத்தின் முப்பெரும் விழா திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. மாநில விருது வழங்கும் விழா, திரி சாரணர் இயக்கத் தொடக்க விழா மற்றும் நீண்ட நாட்கள் சாரண இயக்கத்தில் பணியாற்றுவர்களுக்கு பாராட்டு விழா ஆகியவை ஒருங்கே நடைபெற்றன. தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் சாரண இறைவணக்கப் பாடலைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கு ஏற்றினர். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்கினார். ஜாம்ஸ் மரைன் கல்லூரி முதல்வர் கேப்டன் ராஜசேகர் முன்னிலை வகித்தார்.
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி சாரணிய ஆசிரியை வளர்மதி வரவேற்றார். திருச்செந்தூர் சாரண சாரணியர் இயக்க செயலாளர் சாமுவேல் சத்தியசீலன் சிறப்பு விருந்தினர்களை கெளரவித்தார். சாரணரியக்க மாவட்ட தலைவர் ரத்தினகுமார், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தட்சிணாமூர்த்தி, வட்டாரக் கல்வி அலுவலர்கள் மாணிக்கராஜ் மற்றும் பாப் ஹையஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பல்வேறு பள்ளிகளைச் சார்ந்த சாரண சாரணியர்களுக்கு மாநில அளவிலான ஆளுநர் விருதுக்கான சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டன. மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி அளவில் பயிலும் மாணவ, மாணவியருக்கு திரி சாரணர் இயக்க தொடக்க விழா நடைபெற்றது. சாரணர் இயக்கத்தில் 25 ஆண்டுகள் பணியாற்றிய நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை காந்திமதி மற்றும் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் ஆபிரகாம் இம்மானுவேல் ஆகியோருக்கு வெள்ளி விழா சேவையைப் பாராட்டி பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், கோவில்பட்டி கல்வி மாவட்ட சாரணர் இயக்க செயலாளர் மோகன், திரி சாரணர் இயக்க தெற்கு மண்டல ஆணையாளர் சையூப்கான், கல்வி ஆய்வாளர் ஆனந்தகுமார், முன்னாள் செயலாளர்கள் மற்றும் பல்வேறு பள்ளிகளைச் சார்ந்த சாரண, சாரணியர் இயக்க பொறுப்பாசிரியர்கள் மற்றும் பொறுப்பாசிரியைகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை திரி சாரணர் இயக்க மாவட்ட ஆணையாளர் ஜெர்சோம் ஜெபராஜ், சாரணர் இயக்க மாவட்ட ஆணையாளர் ஸ்டீபன் பிரேம்குமார், சாரண பொறுப்பாசிரியர்கள் வேலவன், கண்ணன், சாரணியர் பொறுப்பாசிரியைகள் பேபி லதா, வளர்மதி, ஜெனிபர், நித்யா தேவி ஆகியோர் செய்திருந்தனர்.
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
திருச்செந்தூர் கல்வி மாவட்ட சாரண இயக்கத்தின் முப்பெரும் விழா
Related Posts
Add A Comment


