க அலுவலகம் திறப்பு விழா!
நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
தமிழக வெற்றிக் கழகத்தின் நாசரேத் நகர அலுவலகத்தின் திறப்பு விழாவையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இவ் விழாவிற்கு ஆரம்பமாக நாசரேத் நகரச் செயலாளர் சுதர்சன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் பிரைட்டர் கலந்து கொண்டு நாசரேத் நகர அலுவலகத்தை திறந்து வைத்து பேசினார். இதைத் தொடர்ந்து நாசரேத் பரி. லூக்கா மருத்துவமனையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட இணைச் செயலாளர் விஜய் ஆனந்த், பொருளாளர் சீமான், இளைஞரணிச் செயலாளர் பிரேம் பாண்டியன், தொழில்நுட்ப அணிச் செயலாளர் கார்த்திக் நீதிபாலன், உறுப்பினர் சேர்க்கைப் பிரிவு இணைச் செயலாளர்கள் திலக் சாமுவேல், மதுமிதா,செயற்குழு உறுப்பினர்கள் சஜினா, அமிர்தா, அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் குட்டி, ஆழ்வை மத்திய ஒன்றிய செயலாளர் ஆசீர் ராஜ்குமார், இணைச் செயலாளர் இம்மானுவேல், துணைச் செயலாளர் சிவன், உடன்குடி ஒன்றிய செயலாளர் பத்ரி பிரசாத், ஆறுமுகநேரி நகரச் செயலாளர் நிவாஸ் கண்ணன், நாசரேத் நகர இணை செயலாளர் அப்பலோஸ் மூக்குப்பீறி கிளைச் செயலாளர் விஜய், துணைச் செயலாளர் ராஜன் திருச்செந்தூர் நகர செயலாளர் முருகானந்தம், இணைச் செயலாளர் ஐயப்பன், இளைஞரணி செயலாளர் செல்வம் மற்றும் நாசரேத் நகர நிர்வாகிகள் இஸ்ரவேல், இம்மானுவேல், அபிஷேக், மதுரம், ஜெப்பின், ஸ்டெப்பின், நவீன் சந்திரகுமார், செல்வா, ஆல்வின், ஆனந்த், வினோத், பிரைட், ஜெயராஜ், மகேஷ், செல்வகுமார், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
படவிளக்கம். நாசரேத் பரி. லூக்கா மருத்துவமனையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
2)த.வெ.க தெற்கு மாவட்ட செயலாளர் பிரைட்டர் நகர அலுவலகத்தை திறந்து வைத்தார்.

