12 சீட் வேண்டும்.. அதுவும் சைக்கிள் சின்னத்தில் நிற்க வேண்டும் .. எடப்பாடியிடம் கோரிக்கை வைத்த ஜிகே வாசன்.. ஆதரவாக நிற்கும் பாஜக தேர்தல் பரபரப்புகள் தமிழகத்தில் படர்ந்து வரும் நிலையில், தமாகாவும் தன்னுடைய கூட்டணி அரசியல் அக்கவுண்ட்டை துவங்கி உள்ளது.. இதையடுத்து எடப்பாடி பழனிசாமியிடம் பேச்சுவார்த்தையை நடத்தவும் மும்முரமாகி உள்ளது. கூட்டணியில் இடம்பெறும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளாராம். குறிப்பாக, தமாகாவுக்கு 12 தொகுதிகள் வேண்டும் என்று கேட்டுள்ளாராம். .தமிழக அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல், தேசிய கட்சிகளின் தலைவர்களிடமும் நேரடியான நன்மதிப்பையும், நம்பிக்கையையும் பெற்றவர் ஜிகே வாசன்.. குறிப்பாக, பிரதமர் மோடியின் நன்மதிப்பை பெற்றவர்.அதிமுக பாஜக கூட்டணியில் இணைந்து தமாகா போட்டியிட்டவரை எந்த நெருடலும் இல்லாமல் இருந்த நிலையில், கடந்த முறை தேர்தலில் பாஜக, அதிமுக கூட்டணி முறிந்தது.. இவர்கள் பிரிந்ததில் அதிகம் பாதிக்கப்பட்டது வாசன்தான்.. இரு கட்சிகளையும் ஒன்றிணைக்க பெரும் முயற்சியை எடுத்து கொண்டார்..அதிமுக – பாஜக பாலம்ஆனால், எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதம், வாசனையே அதிர செய்துவிட்டது. இதனால் அந்த தேர்தலில் யார் பக்கம் கூட்டணி வைப்பது என்று தெரியாமல் வாசன், குழம்பி போனார்..எடப்பாடி பழனிசாமியோ, “அதிமுகவுக்கு நீங்கள் மட்டும் வந்துவிடுங்கள்” என்று வாசனுக்கு பலமுறை அழைப்பு விடுத்து கொண்டேயிருந்தார்.. எனினும் படக்கென பாஜக பக்கம் தாவிவிட்டார்.. பாஜகவின் அழுத்தம் இல்லை என்றால் ராஜ்யசபா சீட் கிடைத்திருக்காது, எனவே அந்த நன்றி கடனுக்காக பாஜக கூட்டணிக்கு சென்றதாக காரணம் சொல்லப்பட்டது.இதை உணர்ந்த பாஜகவும், ஓபிஎஸ்ஸுக்கே 1 சீட் தந்த நிலையில், வாக்கு வங்கியை வலுவாக வைத்திருக்கும் அமமுகவுக்கும் 1 சீட் மட்டுமே தந்த நிலையில், வாசனுக்கு மட்டும் 3 சீட்களை ஒதுக்கியது. ஆனால் 3 தொகுதிகளிலுமே தமாகா மண்ணை கவ்வியது.மூப்பனார் மகன் பாஜகவில்அதுமட்டுமல்ல சொந்த கட்சியில் பலவிதமான விமர்சனங்களுக்கும் வாசன் அன்று ஆளானார்… காலம் காலமாக கடுமையாக எதிர்த்து அரசியல் செய்யும் மூப்பனார் மகன், பாஜகவுடனேயே இணைந்து கொள்வதா? என்று தமாகா நிர்வாகிகள் பலர் அப்போது அதிருப்தி அடைந்தனர்..இதன் உச்சக்கட்டமாக அக்கட்சி தலைமை நிலைய செயலாளர் டி.என். அசோகன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ததையும், இளைஞரணி யுவராஜ் எடப்பாடியிடம் சேர்ந்து கொண்டதையும் இங்கு நாம் நினைவூட்ட வேண்டி உள்ளது..இந்நிலையில், சட்டமன்ற தேர்தல் பரபரப்பு தமிழகத்தில் தொற்றி கொண்டுள்ளது.. அதிமுக – பாஜக ஒன்றிணைந்து இந்த முறை தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், வாசன் தனக்கு 12 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்றும், அந்த தொகுதிகளில் தங்கள் கட்சியின் “சைக்கிள்” சின்னத்தில் போட்டியிட அனுமதி வழங்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்துள்ளாராம்.சைக்கிள் சின்னம் அடையாளம்காரணம், கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தமாகா குறைந்த எண்ணிக்கையிலான தொகுதிகளில், அதுவும் வேறு சின்னத்தில் போட்டியிட்டு தோற்றது.. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டது… தங்களுடைய சைக்கிள் சின்னம் மக்களிடையே தங்கள் கட்சிக்கு அடையாளமாக இருப்பதால், அதே சின்னத்தில் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என்று தமாகா நம்புகிறதாம்..இந்த முறை 12 சீட்டுகளை கேட்டு பெறுமாறு தமாகா நிர்வாகிகள் வலியுறுத்தினார்களாம்.. எனவேதான் அவர்களின் கோரிக்கையை ஏற்று, எடப்பாடி பழனிசாமியிடம் 12 சீட் வேண்டும் என்று கேட்டுள்ளாராம் வாசன்… இந்த பொங்கல் பண்டிகைக்கு பிறகு தொகுதி பட்டியல் எடப்பாடியிடம் வழங்கப்பட்டு, சுமூக முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.12 சீட் எடப்பாடி தருவாராஅதுமட்டுமல்ல, அதிமுக – பாஜக ஆட்சி அமைந்தால் முக்கிய துறையை வாசனுக்கு அளிக்க நிறையவே வாய்ப்புள்ளதாக தெரிகிறது… ஏனென்றால் அதிமுக, பாஜக இரு கட்சிகளின் நன்மதிப்பை பெற்ற வாசன், இரு கட்சிகளும் கூட்டணியில் ஒன்றிணைவதில் மிகப்பெரிய பாலமாக இருந்துள்ளார்.. எனவே பாஜக ஆட்சி அமைந்தால், மத்தியில் மிக முக்கிய துறை வாசனுக்கு கிடைத்துவிடும் என்று தமாகா நிர்வாகிகள் பெருத்த நம்பிக்கையில் உள்ளனர்..வழக்கமாக தமாகாவுக்கு அதிமுக கூட்டணியில் 1 சீட் தருவார்கள்.. அந்த 1 சீட்டிலும் ஈஸியாக தமாகா வெற்றி பெற்றுவிடும்.. ஆனால் இந்த முறை 12 சீட் கேட்கிறார் வாசன்.. ஏனென்றால் ராஜ்ய சபா உறுப்பினர் பதவி விரைவில் முடிவடைவதால், மாநில அரசியலில் கவனம் செலுத்த வாசன் முடிவு செய்துள்ளாராம்.. ஆனால் இவ்வளவு சீட்டையும் மூப்பனார் மகனுக்கு எடப்பாடி தருவாரா தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்.
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
12 சீட் வேண்டும்.. அதுவும் சைக்கிள் சின்னத்தில் நிற்க வேண்டும் .. எடப்பாடியிடம் கோரிக்கை வைத்த ஜிகே வாசன்.. ஆதரவாக நிற்கும் பாஜக
Related Posts
Add A Comment


