தேசிய முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவரும் திமுக தோழமை கட்சியான ஜி ஜி சிவா வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை கூறியிருப்பதாவது ஜனவரி 20 01 2026 இன்று தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட மாடல் சரித்திர நாயகர் லட்சோப லட்ச பெண்களின் வழிகாட்டு மாண்புமிகு ஐயா மு க ஸ்டாலின் அவர்களின் தலைமையில் தமிழ்நாடு சட்டப்பேரவை தொடர் ஆரம்பமான து ஆரம்பத்தில் முதல் பகுதியாக ஆளுநர் RN ரவி அவர்களுக்கு மாண்புமிகு சபா நாயகர் அப்பாவு அவர்கள் சால்வை அணிவித்து மறபின் படி மதிப்பு செய்தார் பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து மடல் ஆரமித்து அவரவர் இருக்கையில் அமர்ந்தார்கள் திடீரென்று ஆளுநர் அவர்கள் தேசிய கீதத்தை உடனே பாட வேண்டும் என்றும் எனது நாற்காலியின் அருகே உள்ள மைக் சபாநாயகர் அமர்ந்தவுடன் தடை செய்யப்பட்டதாகவும் பொய் குற்றச்சாட்டு பதிவு செய்து அடுத்த நொடியே சட்டமன்றத்தை விட்டு வெளியேறினார் தமிழ்நாடு சட்டமன்ற அலுவலக மரபின்படி நிகழ்ச்சி முடியும் படி தான் தேசிய கீதம் பாடல் படும் ஆனால் வேண்டுமென்றே திட்டமிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி அவர்கள் இப்போதே தேசிய கீதம் பாட வேண்டும் என்று அடம்பிடித்து தாம் வெளியேறுவதற்கு ஒரு காரணத்தை தேடி வெளியேறினார் இது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்க செயல் என்பதனை பதிவு செய்கிறேன் மேலும் ஆளுநர் ஆர்என் ரவி அவர்கள் தமிழ்நாட்டில் ஆளுநர் பதவியை எப்போது ஏற்றாரோ அப்போதிலிருந்து தொடர்ந்து தமிழ்நாடு அரசுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிராக செயல்பட்டு அவதூறு கருத்துக்களை பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் வரலாற்றை மறைத்து சனாதன சக்திகளிடம் கருத்தியல் கூட்டு வைத்து சமஸ்கிருத மொழிக்கு ஆதரவாகவும் தமிழ் மொழிக்கும் தமிழ்நாடு வளர்ச்சிக்கும் எதிராகவும் தொடர்ச்சியாக திட்டமிட்டு செயல்பட்டு வந்தால் அதனை தொடர்ச்சியாக இன்று சட்டசபையில் திட்டமிட்டே வெளியேறி விட்டு தேசிய கீதம் கையில் எடுத்து பொய் பிரச்சாரங்களை பத்திரிகையாளர்கள் மத்தியில் சொல்ல மறைந்த வருகிறார் இது ஒரு போதும் அவர்கள் வகிக்கின்ற பதவிக்கு அழகல்ல எத்தனை குற்றச்சாட்டுகள் ஆளுநர் அவர்கள் தமிழ்நாடு அரசு மீது வைத்தாலும் இதை ஒருபோதும் தமிழ்நாட்டு மக்கள் நம்ப மாட்டார்கள் என்பதனை ஆளுநருக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன் ஆளுநர் அவர்களுக்கு சனாதனத்தின் அக்கறை இருந்தால் பாஜக ஆர் எஸ் எஸ் பரிவார் சங்கங்கள் மீது பாசம் இருந்தால் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு நேரடியாக அங்கு சென்று அரசியல் செய்ய வேண்டும் என தவிர அரசு பதவியில் இருந்து கொண்டு தமிழ்நாடு மக்கள் வரிப்பணத்தில் அனைத்தையும் அனுபவித்துவிட்டு இப்படி தமிழ்நாடு அரசுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிராக செயல்படுவது மனிதநேயமற்ற செயல் ஆளுநர் இதோடு தனது தவறை திருத்திக் கொண்டு தமிழ்நாடு அரசின் மூலமாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்த கருத்து எல்லாம் மனதில் வைத்துக் கொண்டு இனியாவது ஆளுநர் தனது போக்கை மாற்ற வேண்டும் இல்லை எனில் தேசிய முன்னேற்றக் கழகத்தின் சார்பாக ஒட்டுமொத்த சமூக நீதி தலைவர்களை ஒன்று திரட்டி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு தமது எதிர்ப்பினை பதிவு செய்வோம் என எச்சரிக்கையோடு கண்டன உரையில் பதிவு செய்கிறேன் இவ்வாறு அறிக்கையில் ஜி ஜி சிவா குறிப்பிட்டு இருக்கிறார்
