சாத்தான்குளம் அருகே வியாபாரிகள் சங்க நிர்வாகி மற்றும் மனைவியைத் தாக்கிய தகப்பன், மகனை சாத்தான்குளம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது , சாத்தான்குளம் அருகே பேய்க்குளம் இசக்கியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் பேய்குளம் வியாபாரிகள் சங்க நிர்வாகி ஆவார் அப்பகுதியில் ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்தி வருகிறார். சம்பவ தினத்தன்று மாலை அவரது வீட்டிற்கு வந்த அவருடைய அண்ணன் கணேசன் மற்றும் அண்ணன் மகன் ராஜ்குமரன் ஆகிய இருவரும் அவதூறாக பேசியதோடு வீட்டின் முன்புறம் கதவு மற்றும் கேட் கதவுகளை மிதித்து உள்ளே வந்து உள்ளே இருந்த லிப்ட் கதவு கண்ணாடிகளை உடைத்துள்ளனர். மேலும் மாரிமுத்து தாக்கியதோடு வீட்டை எனது பெயருக்கு எழுதியதா என்று அவதூராக பேசி கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாரிமுத்து மனைவி பூச்செண்டு சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தார் .புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தகப்பன் மற்றும் மகனை கைது செய்து சிறையில் அடைத்தார். .
படம் புட் நோட்
:1- தகப்பன் மகன் தாக்குதலில் சேதமடைந்த லிப்ட்.
2-கைது செய்யப்பட்ட கணேசன் மற்றும் ராஜ் குமரன்


