தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி சென்னை எம்.ஜி.ஆர். நகரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில் பேசிய இபிஎஸ், இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி சீரழிந்து வருவதாகவும், தமிழகத்தில் கடந்த 75 நாட்களில் 234 கொலைகள் நடந்துள்ளதாகவும் கூறினார்.
தமிழ்நாட்டுக்கு இனி வசந்த காலம் ஆரம்பமாகிவிட்டது, பெண்களுக்குப் பாதுகாப்பான ஆட்சி விரைவில் வரும் என்றும் இபிஎஸ் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றார். தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசித்து விரைவில் அறிவிப்போம் என தெரிவித்தார்.


