அம்மாவின் சொந்தத் தொகுதியான ஸ்ரீரங்கம் – வெற்றி கொடி கட்டும்
ஆர். மனோகரன்……
கழக பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்கள் இன்று தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். அந்த வகையில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான ஆர் மனோகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து இன்று மாலை சென்னையில் பொதுச் செயலாளர் அவர்களை சந்தித்து விட்டு சாலை மார்க்கமாக திருச்சிக்கு வருகை தந்த ஆர். மனோகரன் அவர்களுக்கு திருவானைக்காவல் அருகே உள்ள அவரது அலுவலகத்தில் அதிமுக நிர்வாகிகள் வெடி வெடித்து மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
2026 ஸ்ரீரங்க சட்டமன்ற வேட்பாளர் ஆர் மனோகரன் அவர் கழகத்தில் வகித்த பதவிகள் 1986 ஸ்ரீரங்கம் நகர்மன்ற உறுப்பினர் 1986 நகர கூட்டுறவு வங்கி இயக்குனர் 1988 கழகம் விளைவு பட்ட போது ஜெ.அணி வட்டக் கழக செயலாளர் ஸ்ரீரங்கம் ஆயிரத்தில் 1992 முதல் திருச்சி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் 1996 திருச்சி மாநகராட்சி நான்காவது வார்டு மாமன்ற உறுப்பினர் 2001 ஸ்ரீரங்கம் மண்டல குழு தலைவர் 2002 முதல் 2004 வரை மாவட்ட கழக இணை செயலாளர் 2006 முதல் திருச்சி மாநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் 2009 அதிமுக கழக மாநகர் மாவட்ட செயலாளர் 2009 திருச்சி பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர் 2009 மாண்புமிகு அம்மா அவர்களின் தலைமையில் ஆகஸ்ட் 14 திருச்சி ஜி கார்னரில் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் முதல்முறையாக சட்டமன்றத்திற்குள் நுழைந்தது 2011 நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் மாண்புமிகு அம்மா அவர்களின் ஆட்சி பெற்ற வேட்பாளராக போட்டியிட்டு சுமார் 21,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார் 2013 மாண்புமிகு அம்மா அவர்களால் 28 2 2013 அன்று தமிழ்நாடு அரசு சட்டமன்ற தலைமை கொறடாவாக அம்மா அவர்களால் நியமிக்கப்பட்டார் 2013 அம்மா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக பணியாற்றினார் 2016 திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளராக நின்று வெற்றி வாய்ப்பை இழந்தார் 2023 கழகப் பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் அவர்களால் கழக அமைப்பு செயலாளராக நியமனம் செய்யப்பட்டார் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் நூற்றுக்கணக்கான கழக பொதுக் கூட்டங்கள் நடத்தியது மாண்புமிகு அம்மா அவர்கள் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட கழகத்தின் சார்பில் மனு செய்யக்கூடிய அரிய வாய்ப்பு 2011 திருச்சி யில் மாண்புமிகு அம்மா அவர்களின் திருக்கரத்தால் தேர்தல் அறிக்கை வெளியிட அதனை பெரும் பொன்னான வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்று அவர் கழகத்திற்கு ஆற்றிய பணிகளை மீண்டும் 2026 ஸ்ரீரங்கம் சட்டமன்ற வேட்பாளராக என்னை நிறுத்திய கழகப் பொதுச் செயலாளர்களுக்கு கோடான கோடி நன்றி என்று தெரிவித்தார்


