நாசரேத்தில்
கோடை கால இலவச கால்பந்து பயிற்சி முகாம்
நாசரேத்தில் கோடை கால இலவச கால்பந்து பயிற்சி முகாம் நடந்தது.
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மற்றும் வெஸ்டர்ன் கிளப் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான கோடைகால இலவச கால்பந்து பயிற்சி முகாம் 12 நாட்கள் நடந்தது. இதன் நிறைவு முகாமிற்கு பரி.யோவான் பேராலய தலைமைகுரு ஆல்பர்ட் ஜெயசிங் தாமஸ் தலைமை வகித்து ஆரம்ப ஜெபம் செய்தார். வெஸ்டர்ன் கிளப் நிர்வாகி அகஸ்டின் வரவேற்றார். நாசரேத் சேகர பொருளாளர் லேவி அசோக் சுந்தர்ராஜ், முன்னாள் கால்பந்தாட்ட வீரர் பவுளி ஜெயச்சந்திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதையடுத்து பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் மெடல் வழங்கப்பட்டன. பயிற்சியாளர்களாக நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் ராஜாசிங் ரோக்லண்ட் , மாரி, பபிட்டோ, கோவை ஆண்டனி, தூத்துக்குடி ஹரி, ஜெயக்குமார் ஆகியோர் செயல்பட்டனர்.இதில் முன்னாள் ரயில்வே அதிகாரி ஜான்சன், முன்னாள் கால்பந்து வீரர்கள் நசரேயன் ,ஜான் , வில்சன்,சில்வான்ஸ், ஜோனா , கெர்சோம் ,வினோத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் சுதாகர், உடற் கல்வி ஆசிரியர்கள் கால்டுவெல் , சுஜித் செல்வசுந்தர், தனபால் மற்றும் சென்னை முன்னாள் கால்பந்து வீரர் காந்தி ,மகிழன் , இயேசு செல்வன் மற்றும் நாசரேத் வெஸ்டர்ன் கிளப் அணியினர் செய்திருந்தனரர்

