கும்பகோணம் மாநகர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்.
அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி மாநகர செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான எஸ்.கே. கௌரிசங்கர் மற்றும் மாவட்ட துணைத்தலைவர் ஐடி விங் நிர்வாகியான ஞான. சுந்தரபாண்டியன் ஆகியோர், தமிழக வெற்றி கழகத்தின் தஞ்சை கிழக்கு மாவட்ட செயலாளரும், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினருமான வினோத் ரவியை நேரில் சந்தித்து கட்சியில் இணைந்தனர்.இந்த நிகழ்ச்சியில், தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் அவர்களை வரவேற்று கட்சியின் அடையாள அங்கியை அணிவித்து வாழ்த்தினர்.
கும்பகோணம் மாநகரில் அதிமுக அமைப்பில் முக்கிய பொறுப்புகளில் இருந்த இருவரின் இந்த திடீர் அரசியல் மாற்றம், உள்ளூர் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், வரவிருக்கும் அரசியல் சூழ்நிலையை முன்னிட்டு இந்த இணைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
நிருபர் அ.மகேஷ்

