கும்பகோணத்தில் மத்திய பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை ஆலோசனைப்படி, சி.பி.ஐ இயக்குநர் பிரவீன் சூட் பதவி நீட்டிப்பு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நீட் தேர்வை ரத்து செய்தும், மாநில அரசே தேர்வுகளை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என மத்திய பாஜக அரசை வலியுறுத்தி, தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கும்பகோணத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேரடி அருகில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் டி.குமரன் தலைமை தாங்கினார். இதில் மாநகர மேயர் க.சரவணன், மாநகரத் தலைவர் கா.மிர்சாதின், மாவட்ட செய்தித் தொடர்பாளர் தண்டாளம் சோ.சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் வட்டாரத் தலைவர்கள் ஏ.மணிசங்கர், டி.கே.கலைச்செல்வன், மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.பாலதண்டாயுதம், மாவட்ட மகளிர் அணி தலைவர் பிஸ்மில்லா பேகம், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் வி.என்.கே.செந்தில்நாதன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் குடந்தை சசி, ஐ.என்.டி.யு.சி நிர்வாகிகள் மோகன்ராஜ், இம்மானுவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல் பேரூர் தலைவர் ஆர்.செல்வமணி, மாநகர நிர்வாகிகள் செந்தில், நாராயணன், நெல்சன், அன்சார் அலி, செல்வராஜ், கொட்டையூர் என்.காசிநாதன், நவநீதம், சங்கர், சிவகுமார், ஆனந்த், ஜோசுவா, பி.கே.வெங்கட்ராமன், கருப்பூர் வில்சன், விஜயகுமார், தண்டபாணி மற்றும் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை வலுப்படுத்தினர். ஆர்ப்பாட்டத்தின் போது “நீட் தேர்வை ரத்து செய்”, “மாநில அரசுக்கு தேர்வு நடத்த அதிகாரம் வழங்கு” என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நிருபர் அ.மகேஷ்

