பூம்புகார் தொகுதியில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற எம்எல்ஏவுக்கு நிர்வாகிகள் வாழ்த்து
மயிலாடுதுறை, மே – 16:
நடந்த முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பூம்புகார் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக திமுக சார்பில் நிவேதா எம்.முருகன் இரண்டாவது முறையாக போட்டியிட்டு, வெற்றி பெற்றார் கடந்த சில தினங்களாக சட்டப்பேரவை நடைபெற்றது. அது முடிந்த நிலையில் நேற்று வீடு திரும்பிய நிவேதா எம்.முருகன் அவர்களுக்கு கழக நிர்வாகிகள் ஏராளமானோர் நேரில் சந்தித்து பூங்கொத்து மற்றும் சால்வைகள் அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அந்த வகையில் நேற்று குத்தாலம் தாலுகாவிற்கு உட்பட்ட திருவாடுதுறை, திருவாலங்காடு திமுக நிர்வாகி மயிலாடுதுறை மாவட்ட வர்த்தக அணி பொறுப்பாளர் வெடி.பாலா, குத்தாலம் ஒன்றிய திமுக பொருளாளர் பாண்டியன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

