Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்த வேளாண் அமைச்சர் ர.வினோத்

    August 1, 2026

    தஞ்சையில் அரசாணை எண் 123-ஐ ரத்து செய்யக் கோரி ஓய்வு பெற்ற அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

    July 31, 2026

    தஞ்சாவூர் புதிய மாவட்ட வருவாய் அலுவலருக்கு விவசாயிகள் சங்கம் வாழ்த்து

    July 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » கும்பகோணத்தில் கனமழை பாதிப்பு: வடிகால் சீரமைப்புக்கு எம்.எல்.ஏ உடனடி நடவடிக்கை
    மாவட்ட செய்திகள்

    கும்பகோணத்தில் கனமழை பாதிப்பு: வடிகால் சீரமைப்புக்கு எம்.எல்.ஏ உடனடி நடவடிக்கை

    SahabudeenBy SahabudeenMay 17, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    கும்பகோணத்தில் கனமழை பாதிப்பு: வடிகால் சீரமைப்புக்கு எம்.எல்.ஏ உடனடி நடவடிக்கை

    கும்பகோணம் மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளான பெருமாண்டி ஊராட்சி அசூர் மெயின்ரோடு, OVM அம்சவள்ளி நகர் எதிரில் நேற்று பெய்த கனமழையால் சாலை முழுவதும் மழைநீர் தேங்கி, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பல ஆண்டுகளாக அப்பகுதியில் புதிய தார் சாலை அமைக்கப்படாமல், குண்டும் குழியுமாக இருந்ததே இந்த பிரச்சினைக்கு முக்கிய காரணமாக உள்ளதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டுவதாக கூறுகின்றனர். இந்நிலையில், சாலையில் மழை நீர் தேங்கி வெளியேற முடியாத அவல நிலை வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
    இதையடுத்து, தகவலை அறிந்த கும்பகோணம் தொகுதி எம்.எல்.ஏ உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது மக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்த அவர், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை தொடர்புகொண்டு, சேதமடைந்த சாலையை உடனடியாக சீரமைக்கவும், இனி மழைநீர் தேங்காத வகையில் வடிகால் வசதிகளை மேம்படுத்தவும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். அவருடன் தமிழக வெற்றி கழகத்தின் மாநகர முக்கிய நிர்வாகிகள் பத்துக்கும் மேற்பட்டோர் உடன் இருந்தனர். மேலும் அவர் கூறுகையில்: கும்பகோணம் தொகுதி மக்களின் அடிப்படை தேவைகள் மற்றும் பொதுநலப் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண்பதே எங்கள் முதன்மை நோக்கம், என எம்.எல்.ஏ வினோத் ரவி தெரிவித்தார்.

    செய்தியாளர் அ.மகேஷ்

    Post Views: 305
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்த வேளாண் அமைச்சர் ர.வினோத்

    August 1, 2026

    தஞ்சையில் அரசாணை எண் 123-ஐ ரத்து செய்யக் கோரி ஓய்வு பெற்ற அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

    July 31, 2026

    தஞ்சாவூர் புதிய மாவட்ட வருவாய் அலுவலருக்கு விவசாயிகள் சங்கம் வாழ்த்து

    July 30, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,077)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (6)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (250)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (389)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.