தமிழர் சட்ட இயக்கம் சார்பில் முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் இரத்ததான முகாம்
2009 ஆம் ஆண்டின் ஈழப் போரில் முள்ளிவாய்க்கால் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழர் சட்ட இயக்கத்தின் சார்பில் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர். பார்த்திபன். தலைமையில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இரத்ததான வங்கியில் வைத்து இரத்ததான முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர். வழக்கறிஞர் ராஜதிவ்யா, மாநில பொருளாளர் வழக்கறிஞர் காளிராஜ், மாநில பசுமை பாதுகாப்பு பிரிவு தலைவர் நிவேக் சமூக ஆர்வலர் நாராயணன், வழக்கறிஞர். நர்மதா, நிதிஷ் ஆகியோர் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.

