வேளாண்துறை தலைமை அலுவலகத்தில் புதிய அமைச்சர் வினோத் ரவி நேரில் ஆய்வு
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்ட கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர். வினோத் ரவி, 78 ஆயிரத்து 650 வாக்குகள் பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் தொடர்ச்சியாக மே 21ஆம் தேதி வேளாண் துறை அமைச்சராக பொறுப்பேற்ற அவர், துறை சார்ந்த அரசு பணிகளை தொடங்கினார். மே 22 – ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள வேளாண்மை இயக்குநரகத்திற்கு நேரில் வருகை தந்த அவருக்கு
அங்கு உள்ள வேளாண்துறை அரசு அலுவலர்கள் அமைச்சருக்கு பூங்கொத்து வழங்கி வரவேற்றனர். பின்னர் அமைச்சர் அலுவலகத்தில் உள்ள பதிவேடுகளை பார்வையிட்டார்.
தொடர்ந்து வேளாண்மை துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறைகளில் பணியாற்றும் அலுவலர்களை சந்தித்து பேசினார். அப்போது துறையின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
வேளாண்மை இயக்குநர் முனைவர் க.வீ. முரளிதரன், இ.ஆ.ப., அவர்களின் முன்னிலையில், தொழில்நுட்ப அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை அவர்களது இருக்கைகளிலேயே சென்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
துறையின் தற்போதைய நிலை மற்றும் நடைபெற்று வரும் பணிகள் குறித்து விவாதித்து, பணிகளை மேலும் சிறப்பாக முன்னெடுக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து அறிவுறுத்தினார்.
நிருபர் அ.மகேஷ்


