கும்பகோணம் மாநகராட்சி 12வது வார்டில், மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ஜூன் 3-ஆம் தேதி புதன்கிழமை காலை கும்பகோணம் மாநகராட்சி ஆழ்வான் கோவில் தெரு 12வது வார்டில் தி .மு. கழக கொடி ஏற்றி வைத்து அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞர் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு திமுக நிர்வாகிகள் சிவசங்கர் மற்றும் அசோகன் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் அப்பகுதி திமுக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும், கலைஞர் அவர்களுக்கு மரியாதை செலுத்தியதையடுத்து, 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இனிப்பு பெட்டகங்கள் வழங்கப்பட்டன. நிகழ்வின் போது “கலைஞர் புகழ் வாழ்க” என கோஷங்கள் முழங்கப்பட்டன.இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் 12வது வார்டு மாமன்ற உறுப்பினர் கே.வி.பி.ஆர். சந்தோஷ், மற்றும் 1வது பகுதி ஐடி விங் ஒருங்கிணைப்பாளர் கே. கே.எஸ்.ரேவந்த் சிறப்பாக செய்திருந்தார்.
செய்தியாளர்: அ. மகேஷ்

