Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    கும்பகோணம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்

    July 29, 2026

    பிலிப்பைன்ஸில் நடைபெற்ற சர்வதேச சட்ட மாநாட்டில் இந்திய வழக்கறிஞர் சங்கம் சார்பில் பாரதி அம்பிகாபதி பங்கேற்பு

    July 29, 2026

    யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால்.. குறிஞ்சி பூக்களைப் பார்வையிட பொதுமக்களுக்குத் தடை

    July 26, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » ஒரு ரிப்பன் 2 சிஸர்ஸ்.. பல்லவி Vs ப்ரியா.. ஈகோ யுத்தம் ஆரம்பம்..!
    இந்தியா

    ஒரு ரிப்பன் 2 சிஸர்ஸ்.. பல்லவி Vs ப்ரியா.. ஈகோ யுத்தம் ஆரம்பம்..!

    SahabudeenBy SahabudeenJune 5, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    திருவிக நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புளியந்தோப்பு பகுதியில் புதிதாக கட்டப்பட்ட மாநகராட்சி உருது நடுநிலைப்பள்ளி கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, எம்.எல்.ஏ பல்லவி கூடுதல் ஆணையர் கற்பகம் மற்றும் மாநகராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    கட்டிட வாயிலில் ஒரு ரிப்பன் கட்டப்பட்டிருந்த நிலையில் மேயர் பிரியா மற்றும் எம்.எல்.ஏ பல்லவி ஆகிய இருவரது கைகளிலும் ஆளுக்கு ஒரு கத்திரிக்கோல் கொடுக்கப்பட்டிருந்தது. முன்னால் நின்ற மேயர் பிரியா ரிப்பன் வெட்டி திறந்து வைக்க முயற்சித்த போது, பின்னால் இருந்துமுன்னால் வந்த எம்எல்ஏ பல்லவி பட்டென ரிப்பனை வெட்டி கட்டிடத்தை திறந்து வைத்தார். அப்போதே மேயர் ப்ரியாவின் முகம் மாறியது.

    பின்னர் கட்டிடத்திற்குள் வைக்கப்பட்டிருந்த குத்து விளக்கில் முதலில் மேயர் பிரியா மெழுகுவர்த்தியை ஏற்றி பற்ற வைத்தார்.இரண்டாவதாக அருகில் நின்ற எம்.எல்.ஏ பல்லவி மெழுகுவர்த்தி ஏற்ற கையை நீட்டினார்.

    அவர் கையில் மெழுகுவர்த்தியை கொடுக்க மறுத்த மேயர் பிரியா, இணை ஆணையர் கற்பகத்திடம் வழங்கினார், இதனால் உடனடியாக அந்த இடத்தில் இருந்து எம்எல்ஏ பல்லவி வெளியேறினார்.

    மதியாதார் தலைவசல் மிதியாதே” என்று வெளியேறிய சட்டமன்ற உறுப்பினர் பல்லவியை அங்கிருந்து அதிகாரிகள் சமாதானப்படுத்தினர்.:அடுத்ததாக திரு.வி.க.நகர் நம்மாழ்வார் பேட்டையில் 2.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில்கட்டப்பட்டுள்ள சென்னை தொடக்கப் பள்ளிக் கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியிலும் மேயர் பிரியாவும், எம்.எல்.ஏ பல்லவியும் பங்கேற்றனர்.

    இந்த முறை ஒரு கத்திரிக்கோல் தான் அதுவும் மேயர் பிரியாவிடம் இருந்ததால் கட்டிடத்தை அவர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து அறைகளுக்கு உள்ளே சென்று பள்ளி மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

    பின்னர் அங்கு மேயர் பிரியா குத்து விளக்கு ஏற்றி விட்டு, அருகில் நின்ற எம்.எல்.ஏபல்லவியிடம் குத்துவிளக்கு ஏற்ற சொல்லி மெழுகுவர்த்தியை கொடுத்தார், ஆனால் அதனை வாங்க மறுத்த பல்லவி, வேண்டாம் நீங்களே ஏற்றுங்கள் என்று கூறினார்.

    அங்கு இருந்த தவெகவினர் பல்லவி பதிலடி கொடுத்ததாக கூறி வரவேற்றனர். இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்த மேயர் ப்ரியா, புரோட்டாக்கால் படி ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு பின்னர் தான் எம்.எல்.ஏ, அது தான் அப்படி செய்ததாக விளக்கம் அளித்தார்.

    ஆனால் 2 வது நிகழ்ச்சியில் மேயர் ப்ரியாவே மெழுகுவர்த்தியை, எம்.எல்.ஏ பல்லவியிடம் கொடுத்தது எப்படி ? இப்போது அந்த புரோட்டாக்கால் என்னவானது ? என்று கேள்வி எழுந்தது. இது குறித்து விளக்கம் அளித்த எம்.எல்.ஏபல்லவி, இன்றைய நிகழ்ச்சியில் மேயர் ப்ரியா பங்கேற்பதாக இல்லை என்பதால் பள்ளி தலைமை ஆசிரியை தன்னை அழைத்ததாகவும், தான் வருவதை அறிந்து கொண்டு மேயர் ப்ரியா அவசரமாக அங்கு வந்து, தன்னை குத்து விளக்கு ஏற்றவிடாமல்தடுத்ததாகவும், தான் பொறுமை காத்ததாகவும் தெரிவித்தார்.

    அரசியல் களத்தில் திமுக மற்றும் தவெக மக்கள் பிரதிநிதிகளின் ஈகோ யுத்தம் பரபரப்பை கிளைப்பிவிட்டுள்ளது.

    Post Views: 280
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    கும்பகோணம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்

    July 29, 2026

    பிலிப்பைன்ஸில் நடைபெற்ற சர்வதேச சட்ட மாநாட்டில் இந்திய வழக்கறிஞர் சங்கம் சார்பில் பாரதி அம்பிகாபதி பங்கேற்பு

    July 29, 2026

    யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால்.. குறிஞ்சி பூக்களைப் பார்வையிட பொதுமக்களுக்குத் தடை

    July 26, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,077)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (6)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (250)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (385)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.