அ.தி.மு.க. தீர்ந்து போன கட்சி அல்ல, மக்களின் குறைகளை தீர்த்த கட்சி; தி.மு.க. கூட்டணி கட்சியினரின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ள த.வெ.க. இ.பி.எஸ்.
சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், தேர்தல் நேரத்தில் திராவிட கட்சிகள் அகற்றப்பட வேண்டும் என கூறிய விஜய், தி.மு.க. கூட்டணி கட்சியினரின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளதாக விமர்சித்தார்.
10 லட்ச ரூபாய் கோடி கடன் இருப்பது தெரிந்தும் கவர்ச்சி அறிவிப்புகளை விஜய் வெளியிட்டது ஏன்? என இ.பி.எஸ். கேள்வி எழுப்பினார்.பதவி வந்தவுடன் பணிவு வேண்டும், த.வெ.க.வினர் தலை கால் புரியாமல் ஆடுவதாக இ.பி.எஸ். குற்றஞ்சாட்டினார்.
அ.தி.மு.க.வில் அனைத்தையும் அனுபவித்தவர்கள் தற்போது மாற்று கட்சிக்குச் சென்றிருக்கிறார்கள் என்றும் உண்மையான தொண்டர் ஒருவர் கூட வெளியில் செல்லவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

