Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    பெண்ணை காதலித்து ஏமாற்றிய வழக்கில் திருச்சியை சேர்ந்த வாலிபரை கைது செய்து சிறையில் அடைக்க கோரி, இந்திய மாதர் தேசிய சம்மேளனம் ஆர்ப்பாட்டம்

    June 12, 2026

    மக்களால் புறம் தள்ளப்பட்ட” அரசியல் மகா நடிகன் ஆர்.பி.உதயகுமார் அவர்களுக்கு நாவடக்கம் வேண்டும். தமிழக வெற்றிக் கழக மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ வி.எம்.எஸ்.முஸ்தபா கண்டன அறிக்கை:

    June 12, 2026

    கும்பகோணம் அருகே சுவாமிமலையில் கோவில் நில பட்டா ஆவண குளறுபடி: நூற்றுக்கணக்கான குடும்பங்கள் அவதி ஜமாபந்தியில் பொதுமக்கள் கோரிக்கை

    June 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » கும்பகோணம் அரசு விரைவு போக்குவரத்துக் கழக மூத்த தொழில்நுட்பப் பணியாளருக்கு பணி நிறைவு பாராட்டு விழா
    மாவட்ட செய்திகள்

    கும்பகோணம் அரசு விரைவு போக்குவரத்துக் கழக மூத்த தொழில்நுட்பப் பணியாளருக்கு பணி நிறைவு பாராட்டு விழா

    SahabudeenBy SahabudeenJune 8, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    கும்பகோணம் அரசு விரைவு போக்குவரத்துக் கழக மூத்த தொழில்நுட்பப் பணியாளருக்கு பணி நிறைவு பாராட்டு விழா

    அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் மூத்த தொழில்நுட்பப் பணியாளரும், சிஐடியு தஞ்சை மண்டல வலைதளப் பொறுப்பாளர், கும்பகோணம் மண்டல துணைத் தலைவர் மற்றும் சிபிஐ(எம்) போக்குவரத்து இடைக்கமிட்டி செயலாளருமான சா. செங்குட்டுவன் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா திங்கள்கிழமை தாராசுரத்தில் நடைபெற்றது. இதனையொட்டி கவிதை நூல் மற்றும் இசை வெளியீட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    1986-ஆம் ஆண்டு வேலை பழகுநராக பணியில் சேர்ந்த சா. செங்குட்டுவன், 1989-ஆம் ஆண்டு நிரந்தரப் பணியில் இணைந்து, தஞ்சாவூர், நாகப்பட்டினம், கும்பகோணம், சென்னை அண்ணாநகர் மற்றும் காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு பணிமனைகளில் 40 ஆண்டுகள் பணியாற்றி 2026 ஜூன் மாதம் ஓய்வு பெற்றார். தாராசுரம் மாதவன் சீதையம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவிற்கு சம்மேளன துணைத் தலைவர் மா. கண்ணன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் து. கோவிந்தராஜு வரவேற்புரையாற்றினார்.

    நிகழ்ச்சியில் சிபிஐ(எம்) கும்பகோணம் மாநகரச் செயலாளர் கே. செந்தில்குமார், கும்பகோணம் பணிமனைத் தலைவர் எஸ். சாமிநாதன், தஞ்சாவூர் பணிமனைத் தலைவர் டி. பரத்ராஜன், மத்திய சங்க துணைத் தலைவர்கள் பி. வெங்கடேசன், ஆர். சரவணன், எஸ். ஆரோக்கியராஜ், சம்மேளனப் பொறுப்பாளர் கே. ஆறுமுக நயினார், சிபிஐ(எம்) தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் சென்னை பாண்டியன் மற்றும் சிஐடியு மாநில துணைத் தலைவர் ஜி. ஜெயபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். ஏற்புரையாற்றிய சா. செங்குட்டுவன், தனது 40 ஆண்டு கால பணிப்பயண அனுபவங்களையும், தொழிலாளர் உரிமைப் போராட்டங்களில் பெற்ற அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து அவரது கவிதை நூல் மற்றும் இசைத் தொகுப்பு வெளியிடப்பட்டது. விழாவில் தொழிற்சங்க நிர்வாகிகள், போக்குவரத்துக் கழக ஊழியர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் திரளாக கலந்து கொண்டு அவருக்கு பாராட்டு தெரிவித்தனர். நிறைவில் ஓய்வு பெற்ற ஓஎன்ஜிசி ஊழியர் சா. சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.

    செய்தியாளர் அ.மகேஷ்

    Post Views: 203
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    பெண்ணை காதலித்து ஏமாற்றிய வழக்கில் திருச்சியை சேர்ந்த வாலிபரை கைது செய்து சிறையில் அடைக்க கோரி, இந்திய மாதர் தேசிய சம்மேளனம் ஆர்ப்பாட்டம்

    June 12, 2026

    கும்பகோணம் அருகே சுவாமிமலையில் கோவில் நில பட்டா ஆவண குளறுபடி: நூற்றுக்கணக்கான குடும்பங்கள் அவதி ஜமாபந்தியில் பொதுமக்கள் கோரிக்கை

    June 11, 2026

    திருவிடைமருதூர் அருகே உள்ள கிராமங்களில் குறைந்த மின்னழுத்தம், தொடர் மின்தடையால் குருவை சாகுபடி பாதிப்பு: விவசாயிகள் கவலை தெரிவித்து மின்வாரிய அதிகாரியிடம் மனு

    June 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,071)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (207)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (318)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.