Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    கும்பகோணம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்

    July 29, 2026

    பிலிப்பைன்ஸில் நடைபெற்ற சர்வதேச சட்ட மாநாட்டில் இந்திய வழக்கறிஞர் சங்கம் சார்பில் பாரதி அம்பிகாபதி பங்கேற்பு

    July 29, 2026

    யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால்.. குறிஞ்சி பூக்களைப் பார்வையிட பொதுமக்களுக்குத் தடை

    July 26, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » குடந்தை சிட்டி லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா: ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
    மாவட்ட செய்திகள்

    குடந்தை சிட்டி லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா: ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

    SahabudeenBy SahabudeenJune 14, 2026No Comments3 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நால் ரோடு பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில், குடந்தை சிட்டி லயன்ஸ் சங்கம் மற்றும் வலங்கைமான் அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி லியோ சங்கத்தின் 2026–27 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.விழாவின் தொடக்கமாக குடந்தை சிட்டி லயன்ஸ் சங்க பெண்கள் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து சங்கத் தலைவர் லயன் எம். அப்துல் சுபஹான் கூட்டத்தைத் தொடங்கி வைத்து நிகழ்ச்சியை தொகுப்பாளரிடம் ஒப்படைத்தார். பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டது. தொடர்ந்து கொடி வணக்கம், லயன்ஸ் பிரார்த்தனை மற்றும் லியோ உறுதிமொழி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. லியோ ஆர். தமிழரசன் உறுதிமொழியை வாசித்தார். உலக அமைதிக்காக அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிடங்கள் மௌனம் செலுத்தினர். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் லயன் எம். அப்துல் சுபஹான் வரவேற்புரையாற்றினார். செயலாளர் லயன் எல். ஜான் லூயிஸ் செயலாளர் அறிக்கையையும், லியோ ருத்ரன் லியோ செயலாளர் அறிக்கையையும் சமர்ப்பித்தனர். எம்.ஜே.எஃப். லயன் ஆர். சந்திரமோகன் பதவியேற்பு அலுவலர் மற்றும் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார்.மாவட்ட முன்னாள் ஆளுநர் பி.எம்.ஜே.எஃப். லயன் ஆர். முகம்மது ரஃபி தலைமை வகித்து புதிய நிர்வாகிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து பொறுப்பில் அமர்த்தினார். மேலும் பல்வேறு சமூக நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். குடந்தை சிட்டி லயன்ஸ் சங்கத்தின் புதிய தலைவராக லயன் எல். ஜான் லூயிஸ் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தலைவருக்கான பேட்ச் அணிவிக்கப்பட்டு, மகுடம் சூட்டி, மலர்மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. அவருடன் நிர்வாக செயலாளராக லயன் எஸ். ராமு, சேவைத் திட்ட செயலாளராக லயன் ஜி. மணி, பொருளாளராக லயன் ஆர். ராஜசேகர் உள்ளிட்டோர் பொறுப்பேற்றனர். மேலும் பத்துக்கும் மேற்பட்டோர் பல்வேறு நிர்வாகப் பொறுப்புகளில் பதவியேற்றனர்.வலங்கைமான் அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி லியோ சங்கத்தின் புதிய தலைவராக லியோ ஆர். தமிழரசன், செயலாளராக லியோ எம். கார்த்திகேயன், பொருளாளராக லியோ எபினேசர் ஆகியோர் பதவியேற்றனர்.நிகழ்ச்சியில் உரையாற்றிய முகம்மது ரஃபி, லயன்ஸ் மற்றும் லியோ சங்கங்கள் சமூக சேவையின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு பொருளாதார உதவி, மருத்துவ உதவி, கல்வி உதவி உள்ளிட்ட பல்வேறு சேவைகளை தொடர்ந்து வழங்கி வருவதாக தெரிவித்தார். கல்வி, மருத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, முதியோர் நலன் மற்றும் மாணவர் நலன் சார்ந்த சேவைப் பணிகளை புதிய நிர்வாகிகள் மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.விழாவையொட்டி திருவலஞ்சுழி சினேகம் முதியோர் இல்லத்திற்கு ரூ.3,000 மதிப்பிலான அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன. இரண்டு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. ஒரு கல்லூரி மாணவிக்கு ரூ.6,000 கல்வி உதவித்தொகையும், இதய நோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு ஓராண்டிற்கான மருத்துவச் செலவுக்கான நிதியுதவியும் வழங்கப்பட்டது.மேலும் மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு அன்னை கருணை இல்லத்தில் காலை உணவு வழங்குதல், பொதுமக்களுக்கான கண் மற்றும் நீரிழிவு பரிசோதனை முகாம்கள் நடத்துதல், 400 பேருக்கு அன்னதானம் வழங்குதல், 30 மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பல்வேறு சமூக நலப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.புதிய தலைவரான லயன் எல். ஜான் லூயிஸ் ஏற்புரையாற்றி, சமூக சேவைப் பணிகளை மேலும் விரிவுபடுத்த உறுதியளித்தார். தொடர்ந்து புதிய நிர்வாகிகளுக்கும், சிறப்பு விருந்தினர்களுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.பின்னர் மாவட்ட மற்றும் மண்டல லயன்ஸ் நிர்வாகிகளான பி. செந்தில்குமரன், பி.எம்.ஜே.எஃப். லயன் கே. ராமதுரை, எம்.ஜே.எஃப். லயன் சங்கரலட்சுமி காளிதாஸ், லயன் எம்.கே.ஆர். சுரேஷ், லயன் பி.ஆர். ஆனந்தகுமார், மற்றும் எம்.ஜே.எஃப். லயன் என். காளிதாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இறுதியாக லயன் எஸ். ராமு நன்றியுரை வழங்கினார். தேசிய கீதத்துடன் விழா நிறைவடைந்தது. பின்னர் அனைவருக்கும் இரவு விருந்து வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை பி.எம்.ஜே.எஃப். லயன் கே. செல்வம் மற்றும் எம்.ஜே.எஃப். லயன் ஜி. சிவராமன் ஆகியோர் தொகுத்து வழங்கினர். லயன்ஸ் மற்றும் லியோ சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். சமூக சேவையை மையமாகக் கொண்டு நடைபெற்ற இவ்விழாவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்.செய்தியாளர் அ.மகேஷ்

    Post Views: 282
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    கும்பகோணம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்

    July 29, 2026

    பிலிப்பைன்ஸில் நடைபெற்ற சர்வதேச சட்ட மாநாட்டில் இந்திய வழக்கறிஞர் சங்கம் சார்பில் பாரதி அம்பிகாபதி பங்கேற்பு

    July 29, 2026

    யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால்.. குறிஞ்சி பூக்களைப் பார்வையிட பொதுமக்களுக்குத் தடை

    July 26, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,077)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (6)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (250)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (385)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.