விசிகவில் இருந்து விலகி அண்மையில் திமுகவில் இணைந்த பனையூர் பாபுவை, வரவிருக்கும் மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலில் வேட்பாளராகக் களமிறக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது.மதுராந்தகம் தனித்தொகுதி என்பதால், அங்கு போட்டியிட வாய்ப்புத் தேடி வந்த பனையூர் பாபுவின் கோரிக்கைக்கு திமுக தலைமைப் பீடம் பச்சைக்கொடி காட்டியுள்ளதாகத் தெரிகிறது.தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தும் விதமாக, தொகுதிக்குள்ளேயே தனது வீட்டை மாற்றிக் கொண்டு வந்து தங்குமாறு அவருக்கு மேலிடம் உத்தரவிட்டுள்ளதுடன், அவருக்கு மாவட்டச் செயலாளர் (மா.செ.) பதவியை வழங்குவதற்கும் ஸ்டாலின் சம்மதம் தெரிவித்துள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
