Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    கும்பகோணம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்

    July 29, 2026

    பிலிப்பைன்ஸில் நடைபெற்ற சர்வதேச சட்ட மாநாட்டில் இந்திய வழக்கறிஞர் சங்கம் சார்பில் பாரதி அம்பிகாபதி பங்கேற்பு

    July 29, 2026

    யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால்.. குறிஞ்சி பூக்களைப் பார்வையிட பொதுமக்களுக்குத் தடை

    July 26, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » நான் கொலை செய்யும் ரிப்போர்ட்டர்…”
    மாவட்ட செய்திகள்

    நான் கொலை செய்யும் ரிப்போர்ட்டர்…”

    SahabudeenBy SahabudeenJune 27, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    கும்பகோணத்தில் சிறிய பத்திரிகையாளர் மிரட்டப்பட்ட சம்பவம் பரபரப்பு!கும்பகோணம் மகாமகக் குளம் அருகே உள்ள ராயா கிராண்ட் ஹோட்டலில், சனிக்கிழமை அரசியல் சூழல் பரபரப்பாக இருந்தது. கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் மு. வீரபாண்டியன் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு கட்சிப் பணி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்திருந்ததால், அங்கு ஊடகங்களின் கூட்டமும் அதிகமாக இருந்தது. தொலைக்காட்சி கேமராக்கள், மொபைல் லைவ்கள், கேள்விகளுடன் காத்திருந்த நிருபர்கள் — வழக்கமான அரசியல் செய்தியாளர் சந்திப்பு சூழல்.அந்த கூட்டத்தில் சிறிய பத்திரிகைகளுக்காக செய்தி சேகரித்து வந்த நிருபர் அ. மகேஷ் என்பவரும் இருந்தார். “புதிய இந்தியா”, “உள்ளாட்சி முரசு”, “கலாம் குரல்” தென்னிலை கதிர் உள்ளிட்ட இதழ்களுக்காக செய்தி சேகரித்து வந்த அவர், தோழர் மு. வீரபாண்டியன் பேசிய உரையை தனது மொபைலில் வீடியோ பதிவு செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.அப்போது தான் சூழல் திடீரென பதற்றமாக மாறியதாக தகவல் வெளியாகியுள்ளது.அங்கு இருந்ததாக கூறப்படும் ரமேஷ்கான் என்ற போலி நிருபர் என்ற நபர், “வீடியோ எடுக்கக் கூடாது” என மகேஷிடம் கடுமையாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மகேஷ், “நீங்கள் எந்த ஊடகத்தைச் சேர்ந்தவர்?” என்று கேட்டதாக தெரிகிறது.அதற்குப் பதிலாக, “நான் கொலை செய்யும் ரிப்போர்ட்டர்… ஜாக்கிரதையாக இரு… உன்னை கொலை செய்து விடுவேன்…” என்று மிரட்டியதாக கூறப்படும் வார்த்தைகள் அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன.இந்த சம்பவம் நடந்தபோது பல்வேறு பத்திரிகை நிருபர்கள் மட்டுமல்லாமல், காவல்துறை சார்பில் எஸ்.பி.சி.ஐ.டி அதிகாரி ஒருவர், கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் மு.அ. பாரதி உள்ளிட்டோரும் அங்கு இருந்ததாக கூறப்படுகிறது.சம்பவம் மேலும் பெரிதாகாமல் இருக்க அங்கிருந்தவர்கள் சமரசமாக பேசி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததாக தகவல். பின்னர் நிருபர் மகேஷ் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.ஆனால் இந்த விவகாரம் தற்போது பத்திரிகை உலகில் தீவிர விவாதமாக மாறியுள்ளது. “சிறிய பத்திரிகைகளில் பணியாற்றும் நிருபர்களுக்கு பாதுகாப்பு இல்லையா?”, “யார் வேண்டுமானாலும் தங்களை நிருபர் என கூறி மிரட்டலா விடுப்பது?” என்ற கேள்விகள் எழுந்துள்ளன.முக்கியமாக, சமூக வலைதள காலத்தில் ஒவ்வொருவரும் கேமரா ஏந்தி நடமாடும் சூழலில், உண்மையான பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு மற்றும் அடையாளம் குறித்து மீண்டும் கவலைகள் எழுந்துள்ளன.இந்த சம்பவம் குறித்து தஞ்சை மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்குமா? மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் நபர் மீது விசாரணை நடைபெறுமா? என்பதையே தற்போது சிறிய மற்றும் சுயாதீன ஊடக நிருபர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். மேலும் இந்த போலி நிருபர் ரமேஷ்கான் என்பவர் கொலை குற்றவாளிகளுடனும் சமூக விரோத செயலில் ஈடுபடும் நபர்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு மாமுல் பெற்று வருவதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது அவர் குறுகிய காலத்தில் ஒரு Innova car கார் ஒரு Maruti கார் வாங்கியுள்ளார், இவருக்கு எப்படி கார் வந்தது யார் வாங்கி கொடுத்தார்கள். என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு போலியான நிருபர் ரமேஷ் கான் மீது குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர் கட்டுரை: அ.மகேஷ்

    Post Views: 202
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    கும்பகோணம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்

    July 29, 2026

    பிலிப்பைன்ஸில் நடைபெற்ற சர்வதேச சட்ட மாநாட்டில் இந்திய வழக்கறிஞர் சங்கம் சார்பில் பாரதி அம்பிகாபதி பங்கேற்பு

    July 29, 2026

    யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால்.. குறிஞ்சி பூக்களைப் பார்வையிட பொதுமக்களுக்குத் தடை

    July 26, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,077)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (6)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (250)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (385)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.