Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    தஞ்சாவூர் புதிய மாவட்ட வருவாய் அலுவலருக்கு விவசாயிகள் சங்கம் வாழ்த்து

    July 30, 2026

    சோளிங்கர் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்ககோரி கண்டன ஆர்ப்பாட்டம்

    July 30, 2026

    கும்பகோணம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்

    July 29, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » கும்பகோணத்தில் நிருபர்கள் விவகாரம்: காவல்துறை சமரச பேச்சுவார்த்தையால் வெளியான செய்தி வாபஸ்
    மாவட்ட செய்திகள்

    கும்பகோணத்தில் நிருபர்கள் விவகாரம்: காவல்துறை சமரச பேச்சுவார்த்தையால் வெளியான செய்தி வாபஸ்

    SahabudeenBy SahabudeenJuly 1, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    கும்பகோணத்தில் நிருபர்கள் விவகாரம்: காவல்துறை சமரச பேச்சுவார்த்தையால் வெளியான செய்தி வாபஸ்

    கும்பகோணம் மகாமகக் குளம் அருகே உள்ள ராயா கிராண்ட் ஹோட்டலில் கடந்த ஜூன் 27ஆம் தேதி நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் கலந்துகொண்ட ஊடகச் சந்திப்பின் போது, இரண்டு நிருபர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பாக சமூக வலைதளங்கள் மற்றும் சில ஊடகங்களில் வெளியான தகவல்கள் குறித்து முக்கிய விளக்கம் வெளியாகியுள்ளது.

    அந்த செய்திகளில், செய்தியாளர் அ. மகேஷ் மற்றும் ரமேஷ்கான் ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதுடன், கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது. இச்சம்பவம் பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், சமூக வலைதளங்களிலும் பல்வேறு கருத்துக்கள் பரவின.

    இந்நிலையில், இரு தரப்பினராலும் அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், ஜூலை 1ஆம் தேதி கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில், கும்பகோணம் பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இந்த பேச்சுவார்த்தையில், செய்தியாளர் அ. மகேஷ் மற்றும் ரமேஷ்கான் ஆகியோர் பரஸ்பர புரிதலுடன் சமரசமாக செல்ல ஒப்புக்கொண்டனர். மேலும், முன்பு வெளியிடப்பட்ட சில தகவல்கள் மற்றும் குற்றச்சாட்டு செய்திகள் காவல்துறை சமரச பேச்சுவார்த்தையின் அடிப்படையில் வாபஸ் பெறப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    மேலும், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் கவனமாக செயல்பட வேண்டும் என்றும், பத்திரிகையாளர்கள் இடையே ஒற்றுமை மற்றும் தொழில்முறை மரியாதை நிலைத்திருக்க வேண்டும் என்றும் கும்பகோணம் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

    செய்தியாளர் அ. மகேஷ்

    Post Views: 90
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    தஞ்சாவூர் புதிய மாவட்ட வருவாய் அலுவலருக்கு விவசாயிகள் சங்கம் வாழ்த்து

    July 30, 2026

    சோளிங்கர் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்ககோரி கண்டன ஆர்ப்பாட்டம்

    July 30, 2026

    கும்பகோணம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்

    July 29, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,077)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (6)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (250)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (387)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.