திருச்சி கிழக்கில் அதிரடி திருவிழா! தவெகவின் ‘நம்பிக்கை நட்சத்திரம்’ தர்கா செளக்கத் பிறந்தநாள் கொண்டாட்டம் கோரிக்கை கிழக்குத் தொகுதியில் அதிகப்படியாக வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களே வெற்றி பெற்றிருக்கிறார்கள் இந்த முறை மண்ணின் மைந்தனுக்கு வாய்ப்பு தர வேண்டும் த.வெ..வின கோரிக்கை….தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தளபதி விஜய்யின் மிக முக்கிய தூண்களில் ஒருவராகவும், திருச்சி கிழக்குத் தொகுதிப் பொறுப்பாளராகவும் திகழும் தர்கா செளக்கத் அவர்களின் பிறந்தநாள் விழா திருச்சியில் விண்ணதிரும் உற்சாகத்தோடு கொண்டாடப்பட்டது.மாவட்ட, மாநில நிர்வாகிகள், தொழில் அதிபர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து அவருக்குத் தங்களின் அன்பான பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். கொண்டாட்டத்தின் சிறப்பம்சங்கள்:விண்ணைப் பிளந்த வானவேடிக்கை: இரவு முழுதும் திருச்சியின் வானத்தை வண்ணமயமாக மாற்றிய பிரம்மாண்ட வானவேடிக்கைகள்.கமகமக்கும் பிரியாணி விருந்து: வருகை தந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் சுடச்சுட கமகமக்கும் பிரியாணி வழங்கி உபசரிக்கப்பட்டது. அன்புமழை பொழிந்த தொண்டர்கள்: அரசியல் பிரபலங்கள் முதல் சாமானிய தொண்டர்கள் வரை திரண்டு வந்து வாழ்த்து மழை பொழிந்தனர். திருச்சி கிழக்கில் ‘மண்ணின் மைந்தன்’ குரல்! சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர், திருச்சி கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காலியாக இருக்கும் திருச்சி கிழக்குத் தொகுதிக்கு, தர்கா செளக்கத் அவர்கள் இப்பொழுதே வலுவான அடித்தளமிட்டு வருகிறார் என்று தவெக தொண்டர்கள் நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர். “இதுவரை வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே வெற்றி பெற்று வந்த திருச்சி கிழக்குத் தொகுதியில், இந்த முறை ‘மண்ணின் மைந்தன்’ தர்கா செளக்கத் அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்” என்ற கோரிக்கையும் இந்த விழாவின் மூலம் திருச்சியில் பலமாக எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.தளபதி விஜய்யின் அரசியல் பாதைக்குத் திருச்சியில் மாபெரும் பலம் சேர்க்கும் வகையில் அமைந்த இந்த விழா, திருச்சி அரசியலில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளதுஇந்நிகழ்ச்சியில் மாநில மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தொழிலதிபர்கள் முக்கிய பிரமுகர்கள் மாற்று கட்சி நிர்வாகிகள் மாவட்ட பகுதி வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
