Homeஇந்தியாகெட்டுப்போன கோழிக்கறி?-KFC கடைக்கு சீல்வைப்பு

கெட்டுப்போன கோழிக்கறி?-KFC கடைக்கு சீல்வைப்பு

மங்களூரு KFC-யில் கெட்டுப்போன கோழிக்கறி வழங்கப்பட்டதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, குடோனை சீல் வைத்தனர்

வாடிக்கையாளர் ஒருவர் ஆன்லைனில் ஆர்டர் செய்த கோழிக்கறி கெட்டுப்போய், துர்நாற்றத்துடன் இருந்ததாக அளித்த புகாரைத் தொடர்ந்து, கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள KFC உணவகத்தில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

மங்களூரு K.S. ராவ் சாலையில் உள்ள சிட்டி சென்டர் வளாகத்தில் செயல்பட்டு வரும் KFC கிளையில் இந்த சோதனை நடைபெற்றது.

சோதனையின்போது உணவகத்தின் சமையலறை, பொருட்கள் சேமிப்பு அறை மற்றும் குளிர்சாதன சேமிப்பு பகுதி உள்ளிட்ட இடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.:தொடர்ந்து, உணவுப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த குடோன் சீல் வைக்கப்பட்டது.

மேலும், உணவுப் பொருட்களின் மாதிரிகள் அதிகாரிகளால் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.

ஆய்வகப் பரிசோதனை முடிவுகள் கிடைத்த பிறகு, அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Must Read